கபில் முதல் கோஹ்லி வரை.. ஆஸி.க்கு எதிரான பெஸ்ட் இந்திய அணி பட்டியலை ரெடி செய்த லட்சுமணன்
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெஸ்ட் இந்திய அணியை வி.வி.எஸ்.லட்சுமணன் தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு கங்குலி கேப்டனாக இருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய இந்திய அணியின் 11 வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரசிகர்களுக்கு அழைப்புவிடுத்திருந்தது.
1985ம் ஆண்டுக்கு பிறகு ஆஸி. மண்ணில் விளையாடிய அனுபவம் உள்ள இந்திய வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நிபந்தனை.

கங்குலி கேப்டன்
இந்த போட்டிக்காக, 11 பேர் கொண்ட அணியை லட்சுமணன் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணியின் கேப்டனாக கங்குலி ஆட வேண்டும் என்று லட்சுமணன் விரும்பியுள்ளார்.

தொடக்கம் சச்சின்தான்
தொடக்க வீரர்களாக, சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலியும், அடுத்ததாக விராட் கோஹ்லி, முகமது அசாருதீன், யுவராஜ்சிங் ஆகியோர் மிடில் ஆர்டரில் களம்புக வேண்டும் என்பது லட்சுமண் விருப்பம்.

டோணியே கீப்பர்
விக்கெட் கீப்பராக டோணி செயல்பட வேண்டும் என்றும், வேகப்பந்து வீச்சாளர்களாக கபில்தேவ், ஜவகல் ஸ்ரீநாத், ஜாகீர்கான் ஆஷிஷ் நெக்ரா ஆகியோரும், ஸ்பின்னராக அனில் கும்ப்ளேவும் செயல்பட வேண்டும் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

டிராவிட் பெயர் இல்லை
இந்த பட்டியலில் தனது பெயரை மட்டுமின்றி, டிராவிட் பெயரையும் லட்சுமணன் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications