Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘மீண்டும் மீண்டும் அதே தவறு’.. சொதப்பிய சீனியர் வீரர்கள்.. கடும் அதிருப்தியில் லக்‌ஷ்மண்!

லார்ட்ஸ்: இந்திய அணியின் சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்து வருவதாக வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended Video

Pujara மற்றும் Rahane திரும்ப திரும்ப அதே தவறை செய்றாங்க - VVS Laxman

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கே.எல்.ராகுல் சிறப்பாக சதமடித்து அசத்தியதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது.

தொடக்கம்

தொடக்கம்

இந்திய அணிக்கு இந்த முறையும் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ரோகித் சர்மா 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 83 ரன்களை அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 126 ரன்களை குவித்தனர்.

இந்தியாவுக்கு ஏமாற்றம்

இந்தியாவுக்கு ஏமாற்றம்

முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப்பால் அடுத்து வரும் வீரர்கள் சிறப்பாக ஆடி 400 ரன்களுக்கு மேல் இந்தியா குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கினர் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரகானே. கோலி 42, ரிஷப் பண்ட் 37 ஆகியோர் தங்களது பங்கிற்கு ஓரளவிற்கு ரன்கள் கொடுக்க, புஜாரா மற்றும் ரஹானே மட்டும் மீண்டும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

புஜாரா

புஜாரா

சட்டீஸ்வர் புஜாராவுக்கு இங்கிலாந்து டெஸ்ட் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆனால் ஆண்டர்சன் வீசிய பந்தில் புஜாரா 9 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதே போல தான் ரஹானேவும், தவறான டைமிங்கால் 1 ரன்னுக்கு வெளியேறினார். இதனால் 400 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 364 ரன்களை எடுத்தது.

வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் அதிருப்தி

வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் அதிருப்தி

இந்நிலையில் சீனியர் வீரர்களின் சொதப்பல் குறித்து முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில் அவர், புஜாராவிடம் டெக்னிக்கல் பிரச்னைகள் மற்றும் ரன் அடிப்பதில் மட்டுமே அதிக ஆர்வம் இருப்பதாலும், விக்கெட் ஆகிறார். நாட்டிங்கம் போட்டியிலும் அவரிடம் பொறுமையே இல்லை. இன்றும் அவரின் ஃபூட் வொர்க்ஸ் சரியாக இல்லை. பந்தை சரியாக பார்க்காமல் ரன் அடித்துவிட வேண்டும் என நினைத்தால் அது இறுதியில் விக்கெட் தான் ஆகும்.

அதே தவறு

அதே தவறு

ரஹானேவும், புஜாராவும் கடந்த 8 - 10 மாதங்களில் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்தே விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றனர். ரஹானே மிகவும் தாமதமாக செயல்படுகிறார். இந்த டெஸ்ட் போட்டியில் அவர்களின் விக்கெட்டை நன்கு உற்றுப் பார்த்தால் தெரியும்.ரஹானேவின் கால் காற்றில் தூக்கி இருக்கும் போதே பந்து நுழைந்துவிட்டது. அவரின் உடலில் எந்தவித மாற்றமுமே ஏற்படவில்லை. ஒரே மாதிரியான பொஷிஷனில் நின்றுக்கொண்டிருந்தார். இதனை அவர்கள் சரி செய்யவேண்டும் என்றும் லக்‌ஷ்மண் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Saturday, August 14, 2021, 17:25 [IST]
Other articles published on Aug 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+