Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த வீரர் நிச்சயம் ஆடனும்.. தலைசிறந்த வீரராக வருவார்.. விராட் கோலிக்கு அட்வைஸ் கூறிய லக்‌ஷ்மண்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சீனியர் பவுலர்கள் 3 பேர் இருந்தாலும், இளம் வீரர் ஒருவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது.

இதற்கான பணிகளில் இந்திய அணி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் முன்னாள் வீரர் புது யோசனை வழங்கியுள்ளார்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கி ஜூன் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு ஆகஸ்ட் 4ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

வேகப்பந்து படை

வேகப்பந்து படை

இங்கிலாந்து களம் வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான ஒன்று. தொடக்கம் முதலே பிட்ச்-ல் நல்ல வேகமும், டேர்னிங்கும் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால் பவுலிங் படையை இரு அணிகளும் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அணியில் அனுபவ வீரர்களான இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் உள்ளனர். இவர்களை பயன்படுத்தவே அதிகளவில் வாய்ப்புள்ளது. இந்நிலையில் அவர்களை தவிர்த்து இளம் வீரர் முகமது சிராஜுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

இதுகுறித்து பேசிய அவர், முகமது சிராஜ் மட்டும் அடுத்த சில வருடங்கள் கடுமையாக உழைத்தால், சர்வதேச அளவில் மிகப்பெரும் பவுலராக பெயர் எடுக்க வாய்ப்புள்ளது. அதற்கான திறமைகளும், தகுதிகளும் அவரிடம் உள்ளது. கடந்த சில மாதங்களாக அவரின் ஆட்டம் பெரியளவில் முன்னேறியுள்ளது. எனவே இவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

அட்வைஸ்

அட்வைஸ்

தற்போதைய இந்திய அணியில் அதிகப்படியான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனினும் விராட் கோலி இளம் வீரர் முகமது சிராஜுக்கு வாய்ப்பு கொடுத்தால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார். கடைசியாக அவரின் பவுலிங்கை ஆஸ்திரேலிய தொடரில் பார்த்தோம். அதில் முக்கிய பங்காற்றினார். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் மிகப்பெரும் வீரராக வருவார் எனக்கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 20, 2021, 18:27 [IST]
Other articles published on May 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+