தப்பு பண்ணிட்டீங்களே ரூட்.. முதன்முறையாக இந்தியாவுக்கு ஆதரவாக லக்ஷ்மன்
சென்னை: இரண்டாவது இன்னிங்ஸில் புதிய பந்தை அஷ்வினிடம் கொடுத்து பந்து வீசச் சொன்னது கோலியின் அற்புதமான கேப்டன்சியை பறைசாற்றுகிறது என்று லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்களும், இரண்டாம் இன்னிங்ஸில் 178 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்த இந்திய அணிக்கு, 420 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 39 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. ரோஹித் 12 ரன்களில் அவுட்டானார்.

டாப் கிளாஸ்.. ஆனால்
இந்நிலையில் போட்டி குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறுகையில், திறமையை வெளிப்படுத்துவதில் இங்கிலாந்து மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. தொடர் ஆரம்பித்ததில் இருந்து இதனை கூறி வருகிறோம். ஆனால், மனதளவில் அவர்கள் சற்று பழமைவாதிகளாகவே உள்ளனர்.

வழக்கமான தொடக்கம் ஏன்?
இரண்டாவது இன்னிங்ஸில், தங்களது ரெகுலரான ஓப்பனிங் பேட்ஸ்மேனோடு இங்கிலாந்து களமிறங்கியது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. ஏனெனில், ரன்களை விரைவாக சேர்த்துவிட்டு டிக்ளேர் செய்து, பிறகு இந்தியாவை ஆல் அவுட் செய்ய, அவர்களின் பவுலர்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும்படி செய்திருக்கலாம்.

இந்தியா பெட்டர்
பர்ன்ஸ் அல்லது சிப்லே-வுடன் அதிரடி வீரர் பட்லரை தொடக்கத்தில் இறக்கியிருக்க வேண்டும். மனதளவில், இங்கிலாந்தைவிட இந்தியா அட்வான்ஸாகவே உள்ளது. அதற்கு சான்றாக, சுந்தர் -அஷ்வினின் போராட்ட குணத்தை நாம் கண்டோம்.

கோலி ஸ்மார்ட் மூவ்
இரண்டாவது இன்னிங்ஸில், புதிய பந்தை அஷ்வினிடம் கொடுத்தது கோலியின் சிறந்த கேப்டன்ஷிப்பை குறிக்கிறது. பந்து நன்றாக திரும்பியது. இது முதல் நாளோ, 2ம் நாளோ அல்ல. நான்காவது நாள். இங்கிலாந்து அதை கருத்தில் கொண்டு, அடித்து ஆடுவதற்கு ஏற்ப பேட்டிங் ஆர்டரை மாற்றியிருக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications