Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு விஷயம்.. இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் தான்.. மற்ற நாடுகளுக்கு பெரும் தலைவலி..லக்‌ஷ்மண் பாராட்டு

மும்பை: ஒரு விஷயத்தில் இந்திய அணி அதிர்ஷ்டம் வாய்ந்தது என்றும் அது மற்ற நாடுகளுக்கு பெரும் பிரச்சினை என்றும் வி.வி.லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்திய இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்கும் வகையில் பிசிசிஐ புதிய முயற்சி எடுத்துள்ளது.

ஒரே நேரத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

 பிசிசிஐ ப்ளான்

பிசிசிஐ ப்ளான்

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ளது. இதனை முடித்தவுடன் ஆக.4ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இது ஒரு புறம் இருக்க, வரும் ஜூலை மாதத்தில் 2வது இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இங்கிலாந்து தொடரிலும், ஜூனியர் வீரர்கள் இலங்கையிலும் மோதவுள்ளனர்.

அதிக வீரர்கள்

அதிக வீரர்கள்

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் லக்‌ஷ்மண், கடந்த சில வருடங்களாக இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆச்சரியமாக உள்ளது. நம்மிடம் சிறந்த வீரர்கள் குவிந்துள்ளனர். நம்முடைய உள்நாட்டு தொடர்கள் பல இளம் திறமைசாளிகளை உருவாக்கி கொடுக்கின்றது. இந்திய 'ஏ' அணிக்காக ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு, ஐபிஎல் ஆகியவற்றால் தான் இத்தகைய சிறந்த வீரர்கள் கிடைத்துள்ளனர். இதனால் பிசிசிஐ-க்கு அவர்களை எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.

இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

இத்தனை சிறப்பான வீரர்கள் கிடைத்திருப்பது இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் தான் எனக்கூறுவேன். ஆனால் இது மற்ற நாடுகளுக்கு பெரிய பிரச்னையாக இருக்கும். அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்கள் சிலரும், 2வது இந்திய அணியில் இடம்பெறவிருப்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

முதல் திட்டம் வெற்றி

முதல் திட்டம் வெற்றி

பிசிசிஐ-ன் திட்டம்படி 24 வீரர்கள் கொண்ட இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்றடைந்துவிட்டது. சவுத்தாம்டனில் உள்ள ஹோட்டலில் குவாரண்டைனில் இருக்கும் அவர்கள் இன்று முதல் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். இதே போல இலங்கை தொடருக்காக இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, June 6, 2021, 14:02 [IST]
Other articles published on Jun 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+