Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க சொக்கா ஷோக்காகீது.. வி.வி.எஸ்.லட்சுமணனிடம் கும்பலாக போய் கலாய்த்த இந்திய வீரர்கள்!

கொல்கத்தா: இந்தியா-தென் ஆப்பிரிக்கா நடுவேயான கடைசி டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில், ஸ்டார் டிவிக்காக கமெண்ட் செய்ய வந்த முன்னாள் இந்திய வீரர், வி.வி.எஸ்.லட்சுமணனை காகிதம் ஏந்தி செல்லமாக கலாய்த்துள்ளனர் இந்திய வீரர்கள்.

கடைசி டி20 போட்டியை ஸ்டார் டிவியில், வர்ணனை செய்வதற்காக கொல்கத்தா வந்திருந்தார் வி.வி.எஸ்.லட்சுமணன்.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன்

போட்டி தொடங்கும் நேரத்துக்கு முன்பாக, கமெண்டரி பாக்ஸ் அறையில் இருந்து போட்டி தொடர்பான விவாதத்தில் அவர் பங்கேற்றார். வி.வி.எஸ்.லட்சுமணன் வழக்கமாக மிகவும் ஃபார்மலாக டிரஸ் அணிந்து வரக்கூடியவர். மிஸ்டர் ஜென்டில்மேன் என்று அழைக்கப்பட கூடியவர்.

சோக்கான சொக்கா

சோக்கான சொக்கா

ஆனால், நேற்று வி.வி.எஸ்.லட்சுமணன், மிகவும் யூத்ஃபுல்லாக, ப்ளூ கலர் சட்டையில், பறவைகள் பறக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்ட ஆடை அணிந்திருந்தார். மழையால் ஆட்டம் தாமதமாகிக்கொண்டிருந்த நிலையில், டிரஸ்சிங் ரூமில் இருந்த இந்திய வீரர்கள் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை பார்த்தனர்.

கவர்ந்த சட்டை

கவர்ந்த சட்டை

அவர்களுக்கு வி.வி.எஸ்.லட்சுமணன் ஆடையை பார்த்ததும் உற்சாகம் பீறிட்டுவிட்டது. அதிலும், டிரஸ்சிங் ரூம் சேட்டைகளுக்கு பெயர் பெற்ற ஹர்பஜன்சிங்கிற்கு, இதை வைத்து எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

சூப்பரப்பு

சூப்பரப்பு

இதையடுத்து ஒரு காகிதத்தை எடுத்து, "லட்சுமணன், நாங்கள் உங்கள் சட்டையை விரும்புகிறோம்" என்று எழுதி, ஹார்ட் படம் வரைந்து உள்ளே அம்பு துளைப்பது போன்ற படத்தையும் அதில் வரைந்தார் பஜ்ஜி. இதன்பிறகு, கோஹ்லி, தவான் உள்ளிட்ட அணி வீரர்கள் பலரையும் அழைத்துக்கொண்டு, கமெண்டரி அறைக்கு வெளியே நின்றபடி அந்த பேப்பரை உயர்த்தி பிடித்தார் பஜ்ஜி. மேலும், 'சூப்பர்...' என்பதை போல கை விரலை குவித்து சைகையும் செய்தனர்.

செல்லப்பிள்ளை

செல்லப்பிள்ளை

இந்த காட்சியை ஸ்டார் டிவி படம்பிடித்து ஒளிபரப்பியது. இதை பார்த்த லட்சுமணன் புன்முறுவலோடு, "நன்றி.." என்றார். வி.வி.எஸ்.லட்சுமணன் இந்தியாவுக்காக விளையாடும் காலத்திலும், சக வீரர்களுக்கு அவர் செல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 9, 2015, 10:44 [IST]
Other articles published on Oct 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+