Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீரும், நெருப்பும் பிரண்ட்ஷிப் ஆனது.. கோஹ்லி, டோணி நட்பு பற்றி விவிஎஸ் லக்ஷ்மண் புகழாரம்!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த டோணி பதவி விலகியதை அடுத்து கோஹ்லி அணியின் கேப்டனாக பதவியேற்றார். கிரிக்கெட் போட்டி நடக்கும் சமயங்களில் களத்தில் கோஹ்லியை டோணி வழி நடத்துவதாக அடிக்கடி செய்திகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் கோஹ்லிக்கும், டோணிக்கும் இடையிலான உறவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ். லக்ஷ்மன் பேசியிருக்கிறார். அவர் களத்தில் எப்படி தங்களுக்குள் பழகிக் கொள்கிறார்கள் என அவர் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதில் அவர் கோஹ்லியும் டோணியும் அணியில் இருக்கும் வீரர்கள் என்பதையும் தாண்டி அவர்கள் நல்ல நபர்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் இருவரும் நீரும்- நெருப்பும் போன்றவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

 கேப்டன்சியை விட்டுக் கொடுத்த டோணி

கேப்டன்சியை விட்டுக் கொடுத்த டோணி

இந்திய அணியின் கேப்டனாக முழு பார்மில் சிறப்பாக் செய்லபட்டுக் கொண்டிருந்தார் டோணி. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மூன்று விதமான ஐசிசி தொடர்களில் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றார். மேலும் தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தார். இவர் மீது சில சிறிய விமர்சனங்கள் வர தொடங்கியதும் உடனடியாக தனது கேப்டன் பதவியை கோஹ்லிக்கு விட்டுக்கொடுத்தார். புதிய கேப்டனாக பொறுப்பேற்ற கோஹ்லியும் தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று டோணியின் சாதனையை சமன் செய்தார்.

 டோணி பார்த் டே கொண்டாட்டம்

டோணி பார்த் டே கொண்டாட்டம்

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தது. அப்போது ஜூலை 7 ம் தேதி டோணிக்கு பிறந்தநாள் வந்ததால் அங்கேயே கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது. அப்போது பேசிய கோஹ்லி "நான் வேண்டுமானால் ரசிகர்களை பொறுத்தவரை அணிக்கு கேப்டனாக இருக்கலாம் ஆனால் எங்களை பொறுத்தவரை எப்போதும் டோணிதான் கேப்டன். அவர் சொல்வதை கேட்டு அந்த வழியில் தான் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்'' என்று அடக்கமாக கூறியிருந்தார்.

 அவங்க அண்ணன் தம்பி

அவங்க அண்ணன் தம்பி

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு குறித்து இந்தியஅணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் பேசி இருக்கிறார். அதன்படி ''கோஹ்லிக்கும் டோணிக்கும் இடையில் பிரச்சனைகள் இருப்பதாக எல்லோரும் சொல்லி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை இவர்கள் இருவரும் அண்ணன் தம்பியைப் போல பழகி வருகின்றனர். ஆட்ட களத்திலும் சரி மைதானத்திற்கு வெளியிலும் சரி அவர்கள் எப்போது நெருக்கமாகவே இருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

 நீரும் நெருப்பும் சேர்ந்த கலவை

நீரும் நெருப்பும் சேர்ந்த கலவை

இருவரில் யார் கேப்டன் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு "கண்டிப்பாக கோஹ்லிதான் கேப்டன். ஆனால் டோணி கோஹ்லியை பல இடங்களில் வழிநடத்துகிறார். மேலும் டோணி கீப்பராக இருப்பதால் அவரால் அணியில் ஆதிக்கம்செலுத்த முடிகிறது என்று கூறினார். கோஹ்லி கோவமான நெருப்பு , டோணி குளிர்ச்சியான நீர். இவர்களின் ஜோடி கண்டிப்பாக இந்திய அணிக்கு 2019ல் உலகக் கோப்பையை வென்று கொடுக்கும்'' என்றும் கூறினார்.

Story first published: Friday, October 27, 2017, 16:06 [IST]
Other articles published on Oct 27, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+