Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடியதிலேயே மறக்க முடியாத சிறந்த டெஸ்ட் போட்டி இது தான்.. லக்ஷ்மனும், கங்குலியும் எதை சொல்றாங்க?

கொல்கத்தா : முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் 18 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நடைபெற்ற மறக்க முடியாத டெஸ்ட் போட்டி ஒன்று குறித்து ட்விட்டரில் பகிர்ந்தார்.

அந்த போட்டி தான் ஆடியதிலேயே சிறந்த டெஸ்ட் போட்டி என கங்குலியும் கூறியுள்ளார். அப்படி எந்த டெஸ்ட் போட்டி அது?

அடையாளத்தை மாற்றிய போட்டி

இந்திய கிரிக்கெட் அணி 90களின் மத்தியில் துவங்கி சரிவை சந்தித்து வந்த போது, இந்திய அணியின் அடையாளத்தை மாற்றியது 2001ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி.

18 ஆண்டுகளுக்கு முன்

18 ஆண்டுகளுக்கு முன்

அந்த டெஸ்ட் போட்டி குறித்த தன் பதிவில் விவிஎஸ் லக்ஷ்மன் இப்படி கூறியுள்ளார். "இதே நாளில் 18 ஆண்டுகளுக்கு முன், ஈடன் கார்டனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் மறக்க முடியாத வெற்றி பெற்ற போது அதில் நானும் ஆடும் வாய்ப்பு பெற்றேன்"

கங்குலி பதிவு

இந்த பதிவை கண்ட கங்குலி, "நான் ஆடியதில் சிறந்த டெஸ்ட் போட்டி" என பதில் அளித்துள்ளார். இந்த போட்டி தான் கேப்டனாக கங்குலிக்கு அதிக நம்பிக்கை அளித்தது எனலாம். மேலும், இந்திய கிரிக்கெட் அணியை கங்குலி தன் வழிக்கு கொண்டு வரவும் இந்த மாபெரும் வெற்றி உதவியது. 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் அப்படி என்ன தான் நடந்தது?

பலமான ஆஸி.

பலமான ஆஸி.

அன்றைய காலகட்டத்தில் உலகில் மிகவும் பலமான அணியாக கருதப்பட்ட ஆஸ்திரேலிய அணியை சந்தித்தது இந்தியா. இன்று ஜாம்பவான்களாக கருதப்படும் ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், மேத்யூ ஹைடன், கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், மெக்கிராத், ஷேன் வார்னே என பலரும் ஆடிய போட்டி அது.

இந்தியா படுமோசம்

இந்தியா படுமோசம்

கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்தது. அதன் பின் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 171 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. விவிஎஸ் லக்ஷ்மன் மட்டுமே 59 ரன்கள் அடித்து இருந்தார்.

விவிஎஸ் லக்ஷ்மன் - டிராவிட் கூட்டணி

விவிஎஸ் லக்ஷ்மன் - டிராவிட் கூட்டணி

இந்தியாவுக்கு ஃபாலோ-ஆன் விதிக்கப்பட்டது. இந்தியா எப்படியும் இன்னிங்க்ஸ் தோல்வி அடையும் என அனைவரும் எண்ணிய போது, விவிஎஸ் லக்ஷ்மன் - டிராவிட் இணைந்து இரண்டாவது இன்னிங்க்ஸில் கூட்டணியாக 376 ரன்கள் குவித்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

விவிஎஸ் லக்ஷ்மன் 281, டிராவிட் 180 ரன்கள் குவிக்க இந்திய அணி 657/7 என்ற நிலையில் டிக்ளர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஹர்பஜன் சிங் முதல் இன்னிங்க்ஸில் 7, இரண்டாம் இன்னிங்க்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது.

Story first published: Friday, March 15, 2019, 17:15 [IST]
Other articles published on Mar 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+