Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 3 பேர் நிச்சயம் ஆட வேண்டும்.. ஆட்டமே மாறிவிடும்.. இந்திய அணியின் ப்ளேயிங் 11.. லக்ஷ்மண் தடாலடி!

சென்னை: இலங்கை தொடரில் 3 முக்கிய வீரர்கள் விளையாடியே தீர வேண்டும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வீரர் இங்கிலாந்து சென்றுள்ளதால், இந்தியாவின் ஏ அணியை இலங்கை சுற்றுப்பயணத்திற்கு அனுப்பியுள்ளது பிசிசிஐ.

டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வருவதால், அதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை சுற்றுப்பயணம்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடர் வரும் ஜூலை 13ம் தேதி முதல் ஜூலை 26ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே இந்த் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து தற்போது இருந்தே எதிர்பார்ப்புகள் எழத்தொடங்கிவிட்டன.

குழப்பம்

குழப்பம்

உலகக்கோப்பைக்கு மிகவும் முக்கியமான தொடர் என்பதால் வீரர்களும் முனைப்புடன் உள்ளனர். ஷிகர் தவான் தலைமையில் மொத்தம் 20 பேர் கொண்ட இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இதில் 14 பேர் ஏற்கனவே சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள் ஆவர். எனவே சீனியாரிட்டிபடியும் ப்ளேயிங் 11ல் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

பவுலர்கள்

பவுலர்கள்

இந்நிலையில் இந்திய அணியில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிச்சயம் ஆடியே தீர வேண்டும் என லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சஹால் மிகவும் வெற்றிகரமானவர் மட்டுமல்ல அனுபவ வீரரும் ஆவார். அவரின் தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது. அதே போல குல்தீப் யாதவ் சற்று நம்பிக்கையின்றி விளையாடி வருகிறார். அதனை அவர் சரி செய்ய வேண்டும். டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து கண்டிப்பாக இவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்

சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை காண ஆவலுடன் உள்ளேன். ஏனென்றால் அவரின் அறிமுக ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. உலகின் சிறந்த பவுலரான ஆர்ச்சருக்கு எதிராக அவர் சிக்ஸர் அடித்தார். அவரின் தன்னம்பிக்கை மற்றும் திறமைகள் மிகப்பெரிய அளவில் உள்ளன. எனவே இது அவருக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. இதில் சிறப்பாக விளையாடி டி20 உலகக்கோப்பையில் கால் எடுத்து வைக்க வேண்டும்.

Story first published: Friday, July 9, 2021, 19:18 [IST]
Other articles published on Jul 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+