'என்னய்யா கேப்டன்ஷிப் பண்றீங்க?' - விளாசும் விவிஎஸ் லக்ஷ்மன்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், அஷ்வினுக்கு சரியான நேரத்தில் பந்துவீச வாய்ப்பு தரவில்லை என்று விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆட்டம் படுஜோராக சென்றுக் கொண்டிருக்கிறது. கேப்டன் ஜோ ரூட் 150 கடந்துவிட்டார். பென் ஸ்டோக்ஸ் சுத்தமாக இந்திய பவுலர்களை மதிக்கவில்லை. 98 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 63 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்நிலையில், அஷ்வினை சரியான நேரத்தில் இந்திய அணி பயன்படுத்தவில்லை என்பது முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார்.

ஜெர்க் ஆகிட்டேன்
முதல் நாள் ஆட்டத்தின் போது, தேநீர் இடைவேளைக்கு பிறகு கிட்டத்தட்ட 20 - 21 ஓவர்கள் வரை அஷ்வின் பந்துவீச அழைக்கப்படவில்லை. எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. ரூட் போன்ற ஒரு முக்கியமான பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் போது, அவரது விக்கெட்டை எடுப்பது எத்தனை முக்கியமானது. அதை எவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடியோமோ அவ்வளவு சீக்கிரம் வீழ்த்த யோசித்திருக்க வேண்டும்.

இப்போதாவது யோசிங்க
பேட்ஸ்மேன் மீது பிரஷர் போடுவதில் அஷ்வின் தான் நமது பிரதானமான பவுலராக இருக்க வேண்டும். அதேசமயம், சுந்தரும், நதீமும் விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. எளிதாக ரன்களை விட்டுவிடக் கூடாது. அப்படி ரன்கள் கொடுத்தால், நமது முக்கியமான பவுலர்கள் மீதான பிரஷர் அதிகரித்துவிடும் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து பங்கம்
ஆனால், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போக்கு என்னவோ இந்தியா பெரிய லெவலில் கவலை கொள்ளுபடி தான் உள்ளது. இந்திய ஸ்பின்னர்கள் ஒருவரையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. பிட்ச் ஃபிளாட்டாக இருப்பதால் அவர்கள் ரிலாக்ஸாக அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாடும் பும்ரா
லீட் பவுலர் பும்ராவும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் விக்கெட் கைப்பற்ற முடியாமல் அல்லாடி வருகிறார். அவரது சில யார்க்கர்ஸ் விர்ர்ர் மோடில் இருந்தாலும், இங்கிலாந்து அதனை 'இந்தா வச்சிக்க' என்றே டீல் செய்கிறது.


Click it and Unblock the Notifications