For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாண்ட்யாவுக்கு உண்மையான கேப்டன்சி பரீட்சை.. வான்கடே மைதானத்தில் உள்ள சுவாரஸ்யம்.. யாருக்கு வெற்றி

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேட்டு வந்ததை ஒரு சிறப்பம்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். பிட்ச்-ல் இந்த முறை எதிர்பார்க்காத ட்விஸ்ட்கள் இருக்கும்

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் சமீபத்தில் நடந்து முடிந்த சூழலில் அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.

இப்போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதற்காக இந்திய வீரர்கள் முணைப்பு காட்டி வருகின்றனர். கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் ஓய்வு எடுத்துள்ள சூழலில் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தவுள்ளார். எனினும் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி என அனைத்து முன்னணி வீரர்களும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

பிட்ச் எப்படி

பிட்ச் எப்படி

இந்நிலையில் இந்த போட்டிக்கான பிட்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மும்பை வான்கடே மைதானம் வழக்கமாகவே பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்று கூறப்படும். இரு வகையான பந்துவீச்சாளர்களும் இங்கு விக்கெட் எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆட்டத்தின் தொடக்கத்தில் மட்டும் ஓரளவிற்கு ஸ்விங் இருக்கும். எனவே முதலில் நிதானமாக நிலைத்து நின்று ஆடும் வீரர்கள் பெரிய ஸ்கோரை அடிக்க வாய்ப்பு இருக்கிறது.

டாஸின் நன்மை

டாஸின் நன்மை

இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 முறை 2வது பேட்டிங் செய்த அணியும் வெற்றி கண்டுள்ளன. எனவே இங்கு டாஸ் வெல்வது பெரிய விஷயமாக இருக்காது. எனினும் இன்று டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் 2வது பேட்டிங் செய்யவே விரும்புவார்கள். ஏனென்றால் நேரம் போக போக, பிட்ச் இன்னும் பேட்டிங்கிற்கு உதவும். பனிப்பொழிவு இருந்தால் கூடுதல் நன்மை.

கேப்டன்சி சவால்

கேப்டன்சி சவால்

வான்கடே மைதானத்தில் சராசரியாக முதல் இன்னிங்ஸில் 240 ரன்கள் வரை அடிக்க முடியும். 2வது இன்னிங்ஸில் பிட்ச் உதவிய போதும் அழுத்தங்கள் காரணமாக சில சமயங்களில் 210 ரன்கள் வரை மட்டுமே அடிக்க முடிந்துள்ளது. எனவே இன்று ஹர்திக் பாண்ட்யா எப்படி அணியை பார்த்துக்கொள்கிறார் என்பதை பொறுத்தே வெற்றி அமையும் எனத்தெரிகிறது.

Story first published: Friday, March 17, 2023, 10:29 [IST]
Other articles published on Mar 17, 2023
English summary
Wankade Pitch report ahead of India vs Australia 1st ODI match, here is the full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+