Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முந்தைய போட்டிகள்ல விட்டுட்டேன்... இனிமே அஸ்வினுக்கு எப்படி நெருக்கடி கொடுக்கறேன்னு பாருங்க -ஸ்மித்

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை அடித்துள்ளது.

இந்த போட்டியில் லாபுசாக்னே மற்றும் புகோவ்ஸ்கி இருவரும் தலா அரைசதங்களை அடித்துள்ளனர். 4 இன்னிங்சை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் ஒற்றை இலக்க ரன்களை இந்த போட்டியில் கடந்துள்ளார்.

இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய பௌலர் அஸ்வினுக்கு தான் நெருக்கடியை கொடுக்கவிருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினம் துவங்கியுள்ளது. முதல் நாள் ஆட்ட முடிவில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களுடன் தனது ஆட்டத்தை ஆஸ்திரேலியா முடித்துக் கொண்டுள்ளது.

ஸ்மித் அவுட்டாகாமல் 31 ரன்கள்

ஸ்மித் அவுட்டாகாமல் 31 ரன்கள்

இந்த போட்டியில் நவ்தீப் சைனி மற்றும் முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். கடந்த இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் இன்றைய போட்டியில் அவுட் ஆகாமல் 31 ரன்களை எடுத்துள்ளார். கடந்த போட்டிகளில் இந்திய ஸ்பின்னர் அஸ்வினின் பௌலிங்கை எதிர்கொள்வது அவருக்கு சிரமமாக இருந்தது.

ஸ்மித் உறுதி

ஸ்மித் உறுதி

இந்நிலையில் கடந்த போட்டிகளை போலல்லாமல் சிட்னியில் நடைபெறும் இந்த 3வது போட்டியில் தான் இந்திய பௌலர் அஸ்வினுக்கு நெருக்கடி கொடுக்கவுள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த போட்டிகளை போலல்லாமல் இன்றைய போட்டியில் ஸ்மித் மிடில் ஆர்டரில் களமிறங்கி ஆடியுள்ளார்.

ஸ்மித் மகிழ்ச்சி

ஸ்மித் மகிழ்ச்சி

இந்நிலையில் மிடில் ஆர்டரில் ஆடியது குறித்தும் ஸ்மித் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனிடையே நாளைய தினம் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இந்த போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கவுள்ளது. அதில் ஸ்டீவ் ஸ்மித் தான் குறிப்பிட்டது போல அதிரடி ஆட்டத்தை அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, January 7, 2021, 17:25 [IST]
Other articles published on Jan 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+