For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சின்ன கிராமத்தில் இருந்து வந்து உச்சம் தொட்டவர்.. இந்திய ஜாம்பவானை புகழ்ந்து தள்ளிய வக்கார் யூனிஸ்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வேகப் பந்துவீச்சாளரான வக்கார் யூனிஸ் தோனி குறித்து பாராட்டி பேசி உள்ளார்.

Recommended Video

Dhoni Birthday 2020 | Happy Birthday Dhoni

இந்திய அணியின் கேப்டன்களான கங்குலி, தோனி, விராட் கோலி குறித்து விரிவாக பேசிய அவர், தோனி குறித்து பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றார்.

தோனியின் வளர்ச்சி குறித்து பேசிய வக்கார் யூனிஸ், அவரை எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் சிறந்த தலைவர் எனவும் கூறினார்.

கங்குலிக்கு பின்..

கங்குலிக்கு பின்..

கங்குலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவருக்கு பின் தோனி இந்திய அணியை வேறு ஒரு உயரத்துக்கு அழைத்துச் சென்றார். தோனி தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை வென்றது.

இந்திய அணியில் தோனி

இந்திய அணியில் தோனி

தோனி இந்திய அணிக்குள் நுழைந்த போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இந்திய அணிக்குள் ஒரு வீரர் இடம் பெற்றுள்ளார் என்றே கூறப்பட்டது. அப்போது தோனியின் அதிரடி ஆட்டம் பற்றிய எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.

உயரங்களை தொட்ட தோனி

உயரங்களை தொட்ட தோனி

ஆனால், அதைத் தாண்டி அவர் கேப்டன் ஆவார் என்றோ, உள்ளுணர்வு சார்ந்து முடிவு எடுக்கும் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பார் என்றோ யாரும் நினைக்கவில்லை. அந்த உயரங்களை எட்டி இந்திய அணி இரண்டு உலகக்கோப்பை வெல்லவும் காரணமாக இருந்தார் தோனி.

உலகக்கோப்பை சாம்பியன்

உலகக்கோப்பை சாம்பியன்

இது பற்றி பேசிய வக்கார் யூனிஸ், "இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்தை கங்குலி தான் துவக்கி வைத்தார். அதை தோனி தொடர்ந்து வழி நடத்திச் சென்றார். அவர் உலகக்கோப்பை சாம்பியன். இரண்டு உலகக்கோப்பைகளையும் வென்றுள்ளார்." என்றார்.

அற்புதமான மனிதர்

அற்புதமான மனிதர்

"தோனி எப்படிப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர். அவர் அணியை வழிநடத்திய விதம், அதை வார்த்தையில் சொல்வது மிக கடினம். அவர் பலவற்றையும் புரிந்து கொள்வதில் மிகவும் நல்ல, பெரிய தலைவர். அவர் மிக அற்புதமான மனிதர்" என்று பாராட்டினார் வக்கார் யூனிஸ்.

கிராமத்தில் இருந்து வந்து..

கிராமத்தில் இருந்து வந்து..

மேலும், "சிறிய கிராமத்தில் இருந்து வந்து அவர் அடைந்த உயரம், மேலும் இத்தனை பெரிய நாட்டை, அணியை வழி நடத்தியது பாராட்டத்தக்கது" என தோனியின் வளர்ச்சி பற்றி மனம் திறந்து பாராட்டினார் வக்கார் யூனிஸ். விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.

ஐபிஎல்-இல் தோனி

ஐபிஎல்-இல் தோனி

தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஐபிஎல் தொடரில் ஆட அவர் ஆர்வமாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால் தோனி ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, July 6, 2020, 23:51 [IST]
Other articles published on Jul 6, 2020
English summary
Waqar Younis praises Dhoni for his achievements. He says he came from small village and achieved those heights.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+