பாக். கோட்டை விட்டுருச்சே.. ஹாங்காங் கூட ஆட்டம் காட்டுச்சு.. புலம்பும் வக்கார் யூனிஸ்
துபாய் : இந்தியா, பாகிஸ்தான் ஆடிய ஆசிய கோப்பை குரூப் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
அந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி நேற்று பேட்டிங்கில் கோட்டை விட்டது.
இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி, ஹாங்காங் அணிக்கு எதிராக மோசமான செயல்பட்டது. எனவே, இந்தியா வெல்லுமா? என்ற கேள்வியோடு துவங்கிய போட்டியில் பாகிஸ்தான் தோற்றுள்ளது. இதை பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்,

பேட்டிங்கில் பாகிஸ்தான்
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கின் போது அதிக அழுத்தத்தை சந்தித்தது. முதல் சில ஓவர்களில் ரன் குவிக்க மிகவும் சிரமப்பட்டது. மேலும், ஐந்து ஓவர்களில் 3 ரன்கள் மட்டுமே அடித்து 2 விக்கெட்கள் இழந்தது. மேலும், அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க திணறினர். அவர்களுக்கு எங்கே இருந்து அத்தனை பேட்டிங் அழுத்தம் வந்தது? எனக்கு அது புரியவே இல்லை என கூறியுள்ளார் வக்கார் யூனிஸ்.

இந்தியாவுக்கு தானே அழுத்தம்?
மேலும் அவர் கூறுகையில், "கடந்த 10 வருடங்களில் தான் இந்திய அணி இப்போதுதான் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக அழுத்தத்தோடு இருந்தது. நீண்ட இங்கிலாந்து தொடரில் ஆடி விட்டு வந்தது" என கூறினார்.

தடுமாறிய இந்தியா
இந்தியா ஹாங்காங் அணிக்கு எதிராக தன் முதல் குரூப் சுற்றுப் போட்டியில் தடுமாறியது. அந்த வாய்ப்பை பாகிஸ்தான் பயன்படுத்தி இருக்கலாம் என தன் ஆதங்கத்தை கூறினார் வக்கார்.

விறுவிறுப்பு இல்லை
நேற்றைய இந்தியா, பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என பலரும் நினைத்த நிலையில், பாகிஸ்தான் அணி வெறும் 162 ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்தியா அடுத்து பேட்டிங் செய்ய வந்த போது எந்த பரபரப்பும் இன்றி இருந்தது. பாகிஸ்தான் நீண்ட நேரம் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனதும், போட்டியை எளிதாக்கியது.


Click it and Unblock the Notifications