For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சின்னப்பசங்க சார்.. ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவாங்க.. பாக். அணியில் நடக்கும் கூத்து!

Recommended Video

Aus vs Pak 2nd test: Australia won by an innings and 48 runs, whitewashed pak.

அடிலெய்டு : ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு படு மோசமாக அமைந்தது. அதிலும், இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்தனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ்.

வேக வேகமாக பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்.. இந்திய தொடருக்கு முன் மே.தீவுகள் அதிரடி!வேக வேகமாக பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்.. இந்திய தொடருக்கு முன் மே.தீவுகள் அதிரடி!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. உலகக்கோப்பை தொடரில் படு மோசமான தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, தொடர்ந்து போட்டிகளில் தோல்வி அடைந்து வந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற பல திட்டங்களை வகுத்தது. பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரை தேர்வு செய்தார்.

படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்

படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்

அதில் இருவருக்கு டெஸ்ட் போட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் மட்டுமின்றி மற்ற பந்துவீச்சாளர்களும் சொதப்பினர். பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மாற்றி வழங்கப்பட்ட வாய்ப்பு

மாற்றி வழங்கப்பட்ட வாய்ப்பு

முதலில் 16 வயதே ஆன நசீம் ஷா முதல் டெஸ்டில் ஆடினார். அவருக்கு வெறும் 20 ஓவர்கள் மட்டுமே பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் அவரை நீக்கி விட்டு, மூஸா அணியில் சேர்க்கப்பட்டார். அவரும் சரியாக பந்துவீசவில்லை.

பாண்டிங் விளாசல்

பாண்டிங் விளாசல்

பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா வந்து ஆடிய அணிகளிலேயே இது தான் மோசமான பந்துவீச்சை கொண்ட அணி என கடுமையாக விமர்சித்தார்.

வக்கார் யூனிஸ் சமாளிப்பு

வக்கார் யூனிஸ் சமாளிப்பு

இந்த நிலையில், வக்கார் யூனிஸ் இளம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சரியாக பந்துவீசவில்லை என்பதை ஒப்புக் கொண்டாலும், அவர்களை விட்டுக் கொடுக்காமல் பேசி இருக்கிறார்.

சிறப்பாக ஆடுவார்கள்

சிறப்பாக ஆடுவார்கள்

அவர்கள் அடுத்த ஓராண்டில் அதிக போட்டிகளில் ஆடுவதன் மூலம், சிறப்பாக ஆடுவார்கள். அதற்கு இளம் வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி ஒரு உதாரணம் எனக் கூறி அவர்களுக்கு ஆதரவாக பேசி உள்ளார் வக்கார் யூனிஸ்.

ஆதரவு உண்டு

ஆதரவு உண்டு

பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ்-க்கு இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை டெஸ்ட் தொடர்

இலங்கை டெஸ்ட் தொடர்

பாகிஸ்தான் அணி அடுத்து இலங்கை டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அந்த தொடரிலாவது அனுபவம் கொண்ட அணியை தேர்வு செய்யுமா? அல்லது "ஆடி போய் ஆவணி வந்தா எங்க பவுலர்ஸ் டாப்பா வருவாங்க.." என இளம் பந்துவீச்சாளர்களை நம்பி, தொடர்ந்து வாய்ப்பு அளிக்குமா?

Story first published: Wednesday, December 4, 2019, 18:23 [IST]
Other articles published on Dec 4, 2019
English summary
Waqar Younis supports the young bowlers whom failed badly against Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X