Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது முதல் தடவை இல்லை.. எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு.. அதனால.. ஜாம்பவான் வீரரின் அதிர வைக்கும் வீடியோ

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வேகப் பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் ட்விட்டரில் தனக்கு நேர்ந்த அவமானத்தை அடுத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலையில் வக்கார் யூனிஸின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அவரது கணக்கின் மூலம் மிக ஆபாசமான வீடியோ ஒன்று லைக் செய்யப்பட்டு இருந்தது.

அதைக் கண்ட சிலர் அதிர்ச்சி அடைந்து, வக்கார் யூனிஸ்-ஐ கடுமையாக விமர்சனம் செய்தனர்.

பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்

பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இம்ரான் கான், வாசிம் அக்ரமுக்கு பின் வேகப் பந்துவீச்சில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் வக்கார் யூனிஸ். இன்றளவிலும் கிரிக்கெட் உலகில் அவர் மீது பெரும் மரியாதை உள்ளது.

17 லட்சம் ரசிகர்கள்

17 லட்சம் ரசிகர்கள்

அவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவுகளை பகிர்ந்து வந்தார். குறிப்பாக ட்விட்டரில் தொடர்ந்து இயங்கி வந்த அவரை, 17 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவரது ஒவ்வொரு பதிவும் பல லட்சம் பேரை சென்றடைந்து வருகிறது.

ஹேக் செய்யப்பட்டது

ஹேக் செய்யப்பட்டது

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. வக்கார் யூனிஸ் கணக்கில் இருந்து ஒரு ஆபாச வீடியோவை லைக் செய்து இருந்தார் அந்த ஹேக்கர். ஆனால், அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்ட விஷயம் மற்றவர்களுக்கு தெரியவில்லை.

திட்டிய ரசிகர்கள்

திட்டிய ரசிகர்கள்

இந்த நிலையில், சிலர் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என கூறினர். அதே சமயம், சிலர் வக்கார் யூனிஸ் இவ்வாறு செய்ததாக நினைத்து திட்டி வந்தனர். சிலர் இது குறித்து விளக்கம் கேட்டு வந்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் வக்கார் யூனிஸ்.

முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் மூன்று, நான்கு முறை அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, பின் மீட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இதே இன்னலுக்கு ஆளாகி வந்த வக்கார் யூனிஸ் இது பற்றி வருத்தம் அடைந்துள்ளார்.

வீடியோ வெளியிட்ட வக்கார் யூனிஸ்

இது பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வக்கார் யூனிஸ். அத வீடியோவில் சிலர் தன் கணக்கை ஹேக்செய்து மிக மோசமான வீடியோக்களை லைக் செய்துள்ளனர் என விளக்கம் அளித்து வருத்தம் அடைந்துள்ளதாக கூறி உள்ளார்.

அவமானம்

அவமானம்

மேலும், இது எனக்கும், என் குடும்பத்துக்கும் பெரிய அவமானம், அசௌகரியமானது. நான் ட்விட்டர், சமூக வலைதளங்கள் மக்களுடன் பேச மட்டுமே உள்ளது என நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், இந்த மனிதன் அத்தனையையும் பாழாக்கி விட்டான் என கூறி உள்ளார்.

விலகுகிறேன்

விலகுகிறேன்

இந்த ஹேக்கர் இதை முதல் முறை செய்யவில்லை. மூன்று, நான்கு முறை ஹேக் செய்து விட்டான். அந்த மனிதன் இதை நிறுத்த மாட்டான் என நினைக்கிறேன். எனவே, நான் இனி ட்விட்டர் பக்கம் வரப் போவதில்லை. என்னை இனி நீங்கள் சமூக வலைதளத்தின் பக்கம் பார்க்க முடியாது. இது யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் மனிக்கவும் என கூறி உள்ளார்.

Story first published: Friday, May 29, 2020, 16:20 [IST]
Other articles published on May 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+