Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணியில் சேரும் முன்பு வார்னர் செய்த சத்தியம்... ரகசியத்தை கசியவிட்ட விவிஎஸ் லக்ஷ்மண்

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் 500 ரன்களை நிச்சயம் குவிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்தியா வந்து அணியில் இணைந்தார் வார்னர் என்று விவிஎஸ் லக்ஷ்மண் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் தற்போது 12 ஆவது ஐ.பி.எல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஓராண்டு தடைக்கு பின் டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் அணியில் இணைந்து விளையாடினார்.

அந்த தொடரில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 12 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள வார்னர் 1 சதத்துடன் 692 ரன்களை குவித்து எதிரணியினரை மிரட்டினார்.

நாடு திரும்பிய வார்னர்

நாடு திரும்பிய வார்னர்

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரின் இவரது சிறப்பான ஆட்டத்தை கண்ட ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மீண்டும் அவரை உலக கோப்பை அணியில் சேர்த்தது எனவே அவர் பயிற்சிக்காக நாடு திரும்பினார்.

வார்னர் சத்தியம்

வார்னர் சத்தியம்

இந்நிலையில் அணியில் இணையும் வார்னர் ஒரு சத்தியம் செய்ததாக விவிஎஸ் லக்ஷ்மண் கூறியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது: இந்த தொடரில் வார்னர் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வரும்போது அணியின் பயிற்சியாளர் டாம் மோடியிடம் ஒரு சத்தியம் செய்தார்.

500 ரன்கள் குவிப்பு

500 ரன்கள் குவிப்பு

அதாவது, நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்களை நிச்சயம் குவிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்தியா வந்து அணியில் இணைந்தார். அதன்பின் இந்த தொடரில் அவர் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டார்.

நல்ல துவக்கம்

நல்ல துவக்கம்

அதேபோல் இந்த ஆண்டு சிறப்பான துவக்கத்தினை பெயர்ஸ்டோவுடன் இணைந்து கொடுத்தார். அவர் கூறியது போலவே 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார்.

சத்தியம் நிறைவேறியது

சத்தியம் நிறைவேறியது

சத்தியத்தை வார்னர் நிறைவேற்றி விட்டார். தற்போது துவக்க வீரர்கள் இருவர் இன்றி சன் ரைசர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுகளில் விளையாட உள்ளது. அவர்கள் இருவரும் இல்லாதது எங்கள் அணிக்கு பெரிய இழப்பு என்று கூறினார். வார்னர் இதுவரை 5 சீசனில் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 1, 2019, 22:33 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+