Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாடி வீட்டுக்காரர் கோபமா இருக்கார் செல்லம்... இடிக்கு பயந்த மகள்.. தைரியம் கொடுத்த வார்னர்!

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் இடி சத்தத்தைக் கேட்டு பயந்த தனது மகளை ஆறுதல் படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.

எல்லா அப்பாக்களுக்கும் பெண் குழந்தைகள் என்றால் ஸ்பெஷல்தான். வார்னர் மட்டும் விதி விலக்கா என்ன. தனது மகள் என்றால் வார்னருக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான். கிரிக்கெட் ஆட எங்கு சென்றாலும் கூடவே மகளையும் கூட்டிக் கொண்டு போய் விடுவார் வார்னர்.

தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை, குறிப்பாக மகள் ஐவியுடன் எடுக்கும் படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போடுவது வார்னர் பழக்கம். அந்த வகையில் தற்போதும் தனது மகள் படத்தைப் போட்டுள்ளார் வார்னர்.

அச்சச்சோ பாப்பா பயந்து போச்சே

இடி மின்னல் சத்தத்தைக் கேட்டு தனது மகள் பயந்து போய் விட்டதைப் படம் எடுத்துப் போட்டுள்ளார் வார்னர். அதில், இடி, மின்னல் சத்தத்திற்கு யாரோ சிலர் (மகளைத்தான் சொல்கிறார்) பயந்துட்டாங்க. மேல் வீட்டுக்காரர் ரொம்பக் கோபமாக இருக்கிறார் போல என்று போட்டுள்ளார்.

பாப்பா முகத்தைக் காணோமே

பாப்பா முகத்தைக் காணோமே

அந்தப் புகைப்படத்தில் படுக்கையில் தலையணைக்குள் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டு படுத்திருக்கிறது குட்டிப் பாப்பா ஐவி. அருகில் படுத்தபடி படம் எடுத்துள்ளார் அப்பா வார்னர்.

ஏற்கனவே வந்திருக்கேனே

ஏற்கனவே வந்திருக்கேனே

இந்தியாவுக்கு ஐவி பாப்பா வருவது முதல் முறையல்ல. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போதும் பெங்களூரு போட்டிக்கு தனது மகளைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார் வார்னர். அப்போது பெங்களூரு சாலையில் தனது மகளுடன் வாக்கிங் போயிருந்தார்.

அது பாட்டுக்கு விளையாடியது

அப்போது ரசிகர்கள் வார்னரைச் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்க, ஐவி குட்டி பராக்கு பார்த்தபடியும், தனது அப்பாவை ஏன் இத்தனை பேர் சூழ்ந்து கொண்டுள்ளனர் என்று வேடிக்கையாக பார்த்தபடியும் உலாத்திய காட்சி மறக்க முடியாதது.

Story first published: Thursday, May 11, 2017, 13:52 [IST]
Other articles published on May 11, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+