Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால கொடுமை.. ! திறமை இருந்தால் மட்டும் போதுமா? பொன்னான வாய்ப்புகளை வீணடிக்கும் தமிழக வீரர்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைப்பதே மிகப் பெரிய அரிது. அதற்காக எத்தனையோ வீரர்கள் தவம் செய்து உழைத்து வருகின்றனர்.

ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர் வாசிங்டன் சுந்தர் தனது 17 வது வயதிலேயே தனது திறமை மூலம் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம், பேட்டிங்கும் பந்துவீச்சிலும் சும்மா கில்லி மாதிரி செயல்படுவார் என ரசிகர்களும் நம்பினர்.

தொடரும் சோகம்

தொடரும் சோகம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் கூட வாசிங்டன் சுந்தர் தன் திறமையை நிரூபித்தார்.அதற்கு பிறகு உச்சம் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சரிவை நோக்கி சென்றார். காயம், கொரோனா, காயம் என இந்த மூன்று மட்டும் தான் அவர் வாழ்க்கையில் நடந்தது.

பறிப்போன வாய்ப்பு

பறிப்போன வாய்ப்பு

இந்திய அணி வாய்ப்பும் மீண்டும் அவர் கதவை தட்ட அப்போது மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் சுந்தரை சேர்க்க கோலி விரும்பினார். ஆனால் அப்போதும் காயம் ஏற்பட்டு, வாய்ப்பை வீணடித்தார். ஒரு வழியாக உடல்தகுதியை அடைந்து, ஐபிஎல் தொடரில் களமிறங்கினார். ஆனால் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது.

கவுண்டி கிரிக்கெட்

கவுண்டி கிரிக்கெட்

இதனையடுத்து நடப்பாண்டில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தென்னாப்பிரிக்க, இங்கிலாந்து தொடரை பிசிசிஐ பயன்படுத்தியது. ஆனால், காயம் காரணமாக வாசிங்டன் சுந்தர், இந்த தொடரில் இடம்பெறவில்லை. இதனையடுத்து, மீண்டும் உடல் தகுதியை எட்டிய வாசிங்டன் சுந்தர், கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தமாகினார்.

ஜிம்பாப்வே தொடர்

ஜிம்பாப்வே தொடர்

இதில், வாசிங்டன் சுந்தர் விளையாடிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து ஜிம்பாப்வே தொடரில் வாசிங்டன் சுந்தருக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கியது. இந்த தொடரில் அவருக்கு நடுவரிசையில் இடம் உறுதியாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, தனது இடத்தை உறுதி செய்வார் என எதிர்பார்த்த நிலையில், வாசிங்டன் சுந்தர் மீண்டும் காயமடைந்துள்ளார். இதனால் பிசிசிஐ கடும் கோபத்தில் உள்ளது.

Story first published: Saturday, August 13, 2022, 16:31 [IST]
Other articles published on Aug 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+