Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவின் 13 வருட ரெக்கார்ட் க்ளோஸ்.. அசால்ட்டாக உடைத்த வாஷிங்டன் சுந்தர்.. வியப்பில் ரசிகர்கள்!

ஆக்லாந்து: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 13 வருட சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அசால்ட்டாக முறியடித்துள்ளார்.

இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஆங்காங்கே சில தடுமாற்றங்கள் இருந்த போதும் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ரன்களை குவித்து அசத்தியது.

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

இந்திய அணியின் ஓப்பனிங் ஜோடியான ஷிகர் தவான் ( 72 ) - சுப்மன் கில் ஜோடி (50) என சேர்க்க முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். இதன் பின்னர் வந்த பண்ட் (15), சூர்யகுமார் யாதவ் (4) என சொதப்பியதால் மிடில் ஓவரில் தடுமாறியது. அப்போது நிதானமாக ஆடும் சூழலுக்கு தள்ளப்பட்ட சஞ்சு சாம்சன் ( 36) , ஸ்ரேயாஸ் ஐயர் (80 ) ரன்களை அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.

 வாஷிங்டன் சுந்தர் அதிரடி

வாஷிங்டன் சுந்தர் அதிரடி

எனினும் ஆக்லாந்து மைதானம் மிக சிறியது என்பதால் 300 ரன்கள் என்பது கட்டாயம் வேண்டும். ஆனால் 4 ஓவர்கள் தான் மீதம் இருந்தது. அப்போது உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் அனைவருக்கும் ஆச்சரியம் தந்தார். தொடக்கத்தில் இருந்தே பவுண்டரி குவிந்தது. 16 பந்துகளை மட்டுமே சந்தித்த சுந்தர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி நான் அவுட்டாக இருந்தார். இதனால் தான் இந்தியா சுலபமாக 306 ரன்களை குவித்தது.

சூப்பர் சாதனை

சூப்பர் சாதனை

இந்நிலையில் இந்த இன்னிங்ஸ் மூலம் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்து மண்ணில் அதிவேகமாக (16 பந்துகளில்) 30 ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். 2009ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். அதன்பின்னர் ஒரு வீரரால் கூட அடிக்க முடியவில்லை. ஏனென்றால் நியூசிலாந்து மண்ணில் அதிரடி காட்டுவது சாதாரணம் அல்ல. பிட்ச் அந்த அளவிற்கு கடினமாக இருக்கும்.

கபில் தேவ்-ன் சாதனை

கபில் தேவ்-ன் சாதனை

இதே போல கபில் தேவ்-ன் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மண்ணில் ஏற்கனவே கூறியதை போல அதிரடி காட்ட முடியாது. அங்கு கடந்த 1992ம் ஆண்டு கபில் தேவ் 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார். அதன்பின் சுரேஷ் ரெய்னா 2009ல் 211.11 வைத்திருந்தார். தற்போது வாஷிங்டன் சுந்தர் 231.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Friday, November 25, 2022, 13:45 [IST]
Other articles published on Nov 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+