ஓப்பனிங்.. குளோசிங் எல்லாம் அவரே..! டி 20 வரலாற்றில் சாதித்த முதல் இந்தியர்.. !! ஆனால் தமிழர்
Recommended Video
புளோரிடா: 20 ஓவர் போட்டியில் அணியின் முதல் போட்டியில் ஒரு விக்கெட் எடுத்தும், வெற்றிக்கான கடைசி ரன்னையும் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் இரண்டு டி20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவில் நடக்கிறது. நேற்றைய முதல் போட்டியில் இந்தியா ஏதோ தட்டுதடுமாறி வென்றது.
முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் தரமான சம்பவம் ஒன்றை செய்து காட்டி இருக்கிறார். அந்த போட்டியில் 2 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்த வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

சிக்சர் அடித்த வாஷிங்டன்
18வது ஓவரில் வின்னிங் ஷாட் எனப்படும் வெற்றிக்கான ரன்களை, சிக்சராக விளாசி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். 20 ஓவர் போட்டியில் இது ஒரு சாதனையாகும்.

2வது வீரராக சாதனை
அதாவது ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர், கேம்ப்பெல்லின் விக்கெட்டை சாய்த்து அசத்தினார். கடைசியில் வின்னிங் ஷாட்டும் அவர் தான் அடித்தார். இதன்மூலம் டி 20 போட்டியில் முதல் விக்கெட்டையும் வீழ்த்தி, வின்னிங் ரன்னையும் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை சுந்தர் படைத்துள்ளார்.

முதல் வீரர் தான்
2015ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர் மஷ்ரபே மோர்டாசா இந்த சம்பவத்தை செய்துள்ளார். அவரைத்தவிர வேறு யாருமே அப்படி செய்ததில்லை. தற்போது, அந்த பட்டியலில் 2வது வீரராக நுழைந்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்.

டக் அவுட்
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் துவக்க வீரர்களான கேம்பெல், லீவிஸ் என இருவரும் டக் அவுட்டாகினர். இதன் மூலம் சர்வதேச டி 20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரு துவக்க வீரர்களும் 2வது முறையாக டக் அவுட்டாகினர்.


Click it and Unblock the Notifications