Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன சுந்தர்.. இப்படி பண்ணுறீங்க.. அதிகம் நம்பி ஏமாற்றம் அடைந்த கோலி.. அந்த சம்பவம்தான் சிக்கலே!

சென்னை: இந்திய அணியின் கேப்டன் அதிகம் நம்பிய வாஷிங்க்டன் சுந்தர் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை.

சென்னையில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் இந்திய பவுலர்களை அடித்து துவைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஸ்டோக்ஸ் - ரூட் ஜோடி இந்திய பவுலர்களை விளாசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணி இதுவரை 3 விக்கெட்டிற்கு 282 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

அதிரடி

அதிரடி

இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடி வருவதால் இந்திய பவுலர்கள் மேலும் திணற தொடங்கி உள்ளனர். அதிலும் ஸ்டோக்ஸ், ரூட் இருவரும் களத்தில் இருப்பதால் இந்திய வீரர்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னை பிட்ச் இன்னும் முழுமையாக மாறாமல் இருப்பதால் பேட்டிங் செய்ய எளிமையாக இருக்கிறது.

பேட்டிங் பிட்ச்

பேட்டிங் பிட்ச்

சென்னை பிட்ச் பொதுவாக முதல் ஒன்றரை நாட்கள் பேட்டிங் செய்ய வசதியாக இருக்கும். அதன்பின் போக போக பவுலிங் செய்ய ஏற்றபடி மாறும். முக்கியமாக ஸ்பின் பவுலிங் செய்வதற்கு ஏற்றபடி பிட்ச் மாறும்.

சுந்தர்

சுந்தர்

சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஆதரவாக இருக்கும் என்பதால்தான் இந்திய அணியில் 3 ஸ்பின் பவுலர்கள் எடுக்கப்பட்டனர். அதிலும் சென்னையில் பயிற்சி பெற்ற அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் இரண்டு பேரையும் அதிகம் நம்பி கோலி களமிறக்கினார். இதில் அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட் எடுத்தார்.

 சுந்தர் பவுலிங்

சுந்தர் பவுலிங்

ஆனால் சுந்தர் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. இவர் பந்தை சரியாக சுழற்ற முடியாமல் கஷ்டப்பட்டார். இன்னொரு பக்கம் இவரின் லைனிலும் பெரிய அளவில் தவறுகள் இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிக சிறப்பாக சுந்தர் பவுலிங் செய்தார்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதுபோல் சுந்தர் இதுவரை பவுலிங் செய்யவில்லை . முக்கியமாக சென்னை பிட்சில் இவரால் நினைத்தது போல சிறப்பாக பவுலிங் செய்ய முடியவில்லை. இது கோலிக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்று கண்டிப்பாக சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சுந்தர் உள்ளார்.

Story first published: Saturday, February 6, 2021, 10:37 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+