Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் இடத்திற்கு 3 பேரை ரெடி பண்ணிருக்காங்க.. பிசிசிஐ ரகசியத்தை உடைத்த தினேஷ் கார்த்திக்!

மும்பை: அடுத்த மாதத்துடன் அஸ்வின் 38 வயதை எட்டவுள்ள நிலையில், இந்திய அணியின் அடுத்த ஆஃப் ஸ்பின்னருக்கான தேடலில் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வீரரான அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த மாதத்துடன் அஸ்வின் 38 வயதை எட்டவுள்ள நிலையில், அவருக்கான மாற்று வீரரை பிசிசிஐ தயார் செய்து வருகிறது. துலீப் டிராபியில் வாஷிங்டன் சுந்தர், ஹிருத்திக் ஷோக்கின், சரன்ஷ் ஜெய்ன் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகிய 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ipl 2025 ravichandran ashwin Washington Sundar

இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த ஆஃப் ஸ்பின்னர் யார் என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக் தனது பதிலை அளித்துள்ளார். அதில், அடுத்த தலைமுறைக்கான ஆஃப் ஸ்பின்னரை இந்திய அணி நிர்வாகம் நிச்சயம் தேடி வருகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் 3 ஆஃப் ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

புல்கிட் நரங், சரன்ஷ் ஜெய்ன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர்கள் மூவரையும் தான் இந்திய அணி தயார் செய்து வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்திற்கான ரேசில் முன்னிலையில் இருப்பது வாஷிங்டன் சுந்தர் தான். அவருக்கு இதுவரை கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் என்ன செய்ய முடியுமோ அதனை சிறப்பாக செய்திருக்கிறார்.

அதனால் முதன்மை வாய்ப்பு வாஷிங்டன் சுந்தருக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த முறை ஆஸ்திரேலுயா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காபா டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டாலும், அடுத்த வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைக்கவில்லை.

தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர் ஆஃப் ஸ்பின்னர் என்பதோடு ஜடேஜாவுக்கு இணையான பேட்ஸ்மேனும் ஆவார். இதன் காரணமாகவே வாஷிங்டன் சுந்தர் மற்ற மூன்று பேரையும் விட அதிக வாய்ப்புகளை பெற்று வருவதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, August 24, 2024, 23:16 [IST]
Other articles published on Aug 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+