Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமை விட்டு தூக்கிய கோலி.. பாவம் வாஷிங்க்டன் சுந்தரை பாருங்க..என்ன பண்ணிட்டு இருக்காருன்னு.. பகீர்!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்திய வீரர் அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்து 3 விக்கெட் எடுத்துள்ளார்.அக்சர் பட்டேல் 2 விக்கெட் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணி 7 விக்கெட்டிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

வாய்ப்பு

வாய்ப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் போட்டியில் இவர் விக்கெட் எடுக்கவில்லை. ஆனாலும் நன்றாக பேட்டிங் செய்தார். இந்திய அணிக்கு முக்கிய பிரேக் இவர்தான் கொடுத்தார்.

நீக்கம்

நீக்கம்

இவர் சிறப்பாக பேட்டிங் செய்தும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அஸ்வின், குல்தீப், சுந்தர் ஆகியோர் ஒரே மாதிரி பவுலிங் செய்ய கூடிய வீரர்கள். இதனால் சுந்தரை நீக்கிவிட்டு அக்சர் பட்டேலை கோலி அணிக்குள் கொண்டு வந்து இருக்கிறார்.

அக்சர்

அக்சர்

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வாய்ப்பு பெற வேண்டும் என்று வாஷிங்க்டன் சுந்தர் தீவிரமாக முயன்று வருகிறார். மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாகும். இந்த பிங்க் பந்து சாதரண பந்தை விட அதிகம் ஸ்விங் ஆகும். அதேபோல் பவுன்ஸ் ஆகும்.

பவுன்ஸ்

பவுன்ஸ்

இதனால் இந்த போட்டியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று வாஷிங்க்டன் சுந்தர் நினைக்கிறார். இதனால் இப்போதே வாஷிங்க்டன் சுந்தர் பயிற்சியில் இறங்கி உள்ளார். ஆட்டத்திற்கு இடையே பிரேக்கிங் போது வாஷிங்க்டன் சுந்தர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பவுலிங்

பவுலிங்

பிங்க் பந்தை வைத்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். போட்டிக்கு இடையே ஒவ்வொரு பிரேக்கிலும் பிங்க் பந்தை வைத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அக்சர் பட்டேலிடம் வாய்ப்பை இழந்து விட கூடாதது என்பதால் சுந்தர் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்.

Story first published: Sunday, February 14, 2021, 14:21 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+