நோ லுக் சிக்ஸ்.. கண்ணை மூடிக்கொண்டு துல்லியமாக சிக்ஸ் அடித்த "சுந்தர்".. வைரலாகும் வீடியோ!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் வாஷிங்க்டன் சுந்தர் எடுத்த சிக்ஸ் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டை இழந்த 369 ரன்கள் எடுத்தது. அதன்பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடி 336 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி 250 ரன்களுக்கு அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாஷிங்க்டன் சுந்தர், ஷரத்துல் தாக்கூர் அதிரடியால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

சிக்ஸ்
இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய வாஷிங்க்டன் சுந்தர் 144 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி 1 சிக்சர் அடக்கம். இவரோடு பார்ட்னர்ஷிப்
அமைத்த ஷரத்துல் தாக்கூர் 67 ரன்கள் எடுத்தார். இவர் இரண்டு சிக்ஸ் 9 பவுண்டரி அடித்தார்.

சிறப்பு
இதன் மூலம் சுந்தர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலியாவில் 1991 பின் டூர் சென்ற அணிகளில் அறிமுக வீரர் ஒருவர் 7வதாக இறங்கி இவ்வளவு ரன் அடிப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல் இவர்களின் பார்ட்னர்ஷிப்தான் இந்திய அணியின் 7 மற்றும் 8வது பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்
அடித்த பார்ட்னர்ஷிப் ஆகும்.

வாஷிங்க்டன்
இப்படிப்பட்ட நிலையில் இன்று வாஷிங்க்டன் சுந்தர் அடித்த சிகஸ் ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது. நாதன் லைன் வீசிய பந்தை லாங் ஆப் திசையில் சுந்தர் கண்ணை மூடிக்கொண்டு அடித்தார். பந்து எந்த பக்கம் செல்லும் என்பதை பற்றி கவலைப்படாமல் வேகமாக சுற்றினார்.
உறுதியாக தெரியும்
இந்த பந்து சிக்ஸ்தான் செல்லும் என்பதை உறுதியாக கணித்து அதை சிக்ஸ் அடித்தார்.சுந்தரின் இந்த நோ லுக் சிக்ஸ் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
மூத்த பவுலர் ஒருவரின் பந்தை முதல் போட்டியில் ஆடும் ஒரு வீரர் கொஞ்சம் கவலையின்றி கண்ணை மூடிக்கொண்டு சிக்ஸ் பறக்க விட எல்லாம் வேற லெவல் துணிச்சல் வேண்டும் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications