சச்சினுக்கு அடுத்து வாஷிங்டன் சுந்தர்தான்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் களம் இறங்குகிறார்!
மொஹாலி: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், விளையாடும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்து இருக்கிறார். முதல் போட்டியில் களம் இறக்கப்படாமல் இருந்த இவர் இன்றைய போட்டியில் களம் இறங்குகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் பிளேயர்கள் மிகவும் திறமையாக விளையாடி வருகின்றனர். அஸ்வின் போலவே இவரும் மிகவும் திறமையான ஸ்பின் பவுலர் ஆவார்.
தற்போது இந்திய அணியில் இணைந்து இருக்கும் இவர் வித்தியாசமான சாதனை ஒன்றை செய்து உள்ளார். சச்சின், ஹர்பஜன் இருந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
தேர்வானார்
இந்தியா இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடினார். அவருக்கு பதிலாக தற்போது அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்வாகி உள்ளார். இந்திய அணியின் தொப்பியை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சுந்தரிடம் வழங்கினார்.
சாதனை
இந்திய அணியில் இணைந்ததன் மூலம் சுந்தர் புதிய சாதனை படைத்து இருக்கிறார். இந்திய அணியில் சேர்ந்த 7 வது இளம் வீரர் இவர்தான். சச்சின் மிகவும் குறைவாக 16 வயதிலேயே சேர்ந்துவிட்டார். ஹர்பஜன், மஹிந்தர், பர்தீவ் பட்டேல், ரத்தன் சுக்லா, சேட்டன் சர்மா ஆகியோர் 17 வயதில் இந்திய அணியில் சேர்ந்தனர். அதற்கு அடுத்து 18 வயதில் இந்திய அணியில் இணைந்த பெருமையை சுந்தர் பெற்றுள்ளார். தற்போது இந்திய அணியில் விளையாடும் இளம் வீரர் இவர்தான்.
இளமையோ இளமை
ஐசிசி போட்டியில் மட்டும் இல்லாமல் மற்ற சில போட்டியிலும் இவர் இதே போல் சாதனை செய்து உள்ளார். அதன்படி ஐபிஎல் போட்டியில் ஏலம் எடுக்கப்பட்ட இளம் வீரர் இவர்தான். ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாடிய இளம் வீரரும் இவர்தான். தமிழ்நாட்டில் இருந்து குறைந்த வயதில் தேர்வான வீரரும் இவர்தான். இவர் ஐபிஎல் போட்டியில் மிகவும் சிறந்த பவுலிங் பர்பார்மன்ஸை வைத்து இருக்கிறார்.
டிவிட்டரில் வாழ்த்து
இவர் இந்திய அணியில் இணைந்து இருப்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் ''வாழ்த்துகள் வாஷிங்டன் சுந்தர். இது உங்கள் முதல் போட்டி. ஆனாலும் நன்றாக விளையாடுவதன் மூலம் நீங்கள் நல்ல பெயர் எடுக்க முடியும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications