Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னையவே ஓரங்கட்டுறீங்களா.. பல வருட கோபத்தை சொந்த மண்ணில் அடித்து தீர்த்த தமிழர்..இதை கவனிங்க கோலி!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் வாஷிங்க்டன் சுந்தர் சென்னையில் மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்திய அணி வீரர்கள் நேற்று திணறிய நிலையில் இன்று கொஞ்சம் சுதாரிக்க தொடங்கி உள்ளனர்.

நேற்று இந்திய அணியை பண்ட் மற்றும் புஜாரா அதிரடியாக ஆடி மீட்டனர். இந்த நிலையில் இன்று அஸ்வின் மற்றும் சுந்தர் ஆகியோர் நிதானமாக ஆடி வருகிறார்கள்.

எப்படி

எப்படி

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் வாஷிங்க்டன் சுந்தர் சென்னையில் மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார்.நேற்று புஜாரா அவுட்டான பின் சுந்தர் பேட்டிங் இறங்கினார். நேற்று பேட்டிங் இறங்கியதில் இருந்தே சுந்தர் நிதானமான திட்டமிட்டு ஆடி வந்தார்.

திட்டமிட்டு பேட்டிங்

திட்டமிட்டு பேட்டிங்

அடிக்க வேண்டும் என்பதற்காக அடிக்காமல் ஒவ்வொரு பவுலருக்கும் எதிராக திட்டமிட்டு சுந்தர் பேட்டிங் செய்தார். அதிலும் முறையான ஸ்வீப் ஷாட் மூலம் இவர் ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்ட விதம், லாங் ஆன் திசையில் இவர் பவுண்டரி அடித்தது எல்லாம் பார்க்கவே கண்ணை கவரும் விதத்தில் இருந்தது.

 ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இவர் எவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்தாரோ அதேபோல் இன்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சுந்தர் மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்தார். கிளாஸ் பேட்டிங் சொல்லும் வகையில் சுந்தர் பேட்டிங் இன்று அதிரடியாக இருந்தது.

சென்னை

சென்னை

தமிழ்நாடு அணியில் முதல் தர போட்டிகள், ரஞ்சி கோப்பை போட்டிகளில் சுந்தர் ஓப்பனிங் இறங்கி ஆடியவர். அண்டர் 19 போட்டிகளில் இந்திய அணியில் சுந்தர் ஓப்பனிங் இறங்கி, இந்திய அணி அண்டர் 19 உலகக் கோப்பை வெல்லவும் கூட காரணமாக இருந்தார் . அந்த அளவிற்கு இவர் ஓப்பனிங்கில் கலக்கினார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய அணியில் பேட்டிங்கிற்கு இடம் இல்லை என்பதால் ஸ்பின் மீது கவனம் செலுத்தி சுந்தர் ஸ்பின் பவுலராக் மாறினார். இதன் மூலமே அணிக்குள் வந்தார். இவர் பவுலர் என்பதால் பெரிய அளவில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கோபம்

கோபம்

தனக்கு பேட்டிங் கிடைக்கவில்லை என்ற கோபம் சுந்தருக்கு பல வருடம் இருந்தது . இதனால் தற்போது தனக்குள் இருக்கும் பேட்ஸ்மேனை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி சுந்தர் தன்னை நிரூபித்து வருகிறார். நான் வெறும் பவுலர் இல்லை, சிறப்பான பேட்ஸ்மேனும் கூட என்று சுந்தர் நிரூபித்து வருகிறார்.

பேட்டிங்

பேட்டிங்

பேட்டிங்கில் டவுன் ஆர்டரில் இறக்கி இவரை ஓரம்கட்டியதற்கு தற்போது தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் சொந்த மண்ணில் அரைசதம் அடித்து, ஆர்ச்சர், ஆண்டர்சன் போன்றவர்களை எதிர்கொண்டு பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்துள்ளார். இந்திய அணியில் ஜடேஜாவிற்கு மாற்று தான்தான் என்பதை சுந்தர் அதிரடியாக நிரூபித்துள்ளார்.

Story first published: Monday, February 8, 2021, 11:02 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+