Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படி போட்டாலும் அடிக்கிறான்.. ஆஸி.யை திணற வைக்கும் சென்னையின் "வாஷிங்க்டன்".. சூறாவளி சுந்தர்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின் பவுலர் வாஷிங்க்டன் சுந்தர் மிகவும் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கியமான பவுலர்களான ஜடேஜா, அஸ்வின், பும்ரா காயம் அடைந்தனர். இன்னொரு முக்கிய பேட்ஸ்மேன் விஹாரியும் காயம் அடைந்தார்.

இதனால் இந்திய அணி வாஷிங்க்டன் சுந்தரை ஜடேஜாவின் இடத்தில் களமிறங்கியது.குல்தீப் யாதவ் அணியில் இருந்தும் அனுபவம் இல்லாத வாஷிங்க்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார்.

களமிறங்கினார்

களமிறங்கினார்

குல்தீப் யாதாவிற்கு பதிலாக சுந்தர் அணியில் எடுக்கப்பட்டது ஏன் என்று விமர்சனங்கள் வந்தது. ஆனால் சுந்தரின் பேட்டிங் நன்றாக இருக்கும், ஜடேஜாவின் இடத்தை இவர் கொஞ்சம் நிரப்ப வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இதை பெரிய அளவில் விமர்சகர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் வாஷிங்க்டன் சுந்தர் தனது சிறப்பான பேட்டிங் மூலம் தான் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார்.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

வலிமையான ஆஸ்திரேலிய பவுலிங்கிடம் இந்திய அணியின் டாப் ஆர்டர் சரிந்த நிலையில் ரஹானேவிற்கு பின் வாஷிங்க்டன் சுந்தர் களமிறங்கினார். தொடக்கத்தில் ஒரு சில பந்துகள் நிதானம் காட்டிய சுந்தர் போக போக அதிரடியாக ஆடினார். முக்கியமாக ஸ்டார்ஸ், கும்மின்ஸ் பந்துகளில் அசால்ட்டாக பவுண்டரி அடித்தார்.

சிறப்பு

சிறப்பு

டி 20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் சுந்தர் முதல் டெஸ்ட் போட்டியிலும் நன்றாக பேட்டிங் செய்தார் . தேவையில்லாத பந்துகளை விட்டுவிட்டு, வசதியாக வரும் பந்துகளை மட்டும் எதிர்கொண்டார். அதிலும் ஸ்டார்க் பவுலிங்கில் இவர் அசால்ட்டாக அடித்த பவுண்டரிகள் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

பேட்டிங்

பேட்டிங்

டெஸ்ட் போட்டிக்கு ஏற்றபடி சுந்தர் தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றி ஆடி வருகிறார். இந்திய அண்டர் 19 அணியில் பண்ட் உடன் ஓப்பனிங் இறங்கி ஆடி வந்தவர் சுந்தர். தற்போது அந்த பழைய பேட்டிங் ஸ்டைலை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மீட்டு கொண்டு வந்து அசத்தி வருகிறார். ஒரு கடத்தில்.. இவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களே திணற தொடங்கினார்கள்.

அசத்தல்

அசத்தல்

முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொதப்பி டாப் ஆர்டர் சரிந்த நிலையில் தற்போது சுந்தரும் - ஷரத்துல் தாக்கூரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இதுவரை 82 பந்துகள் பிடித்துள்ள சுந்தர் 5 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்துள்ளார். சரிவில் இருந்த இந்திய அணியை சுந்தர் - ஷரத்துல் ஜோடி மீட்டு கொண்டு வந்துள்ளது.

Story first published: Sunday, January 17, 2021, 10:49 [IST]
Other articles published on Jan 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+