சாரி.. இனிமே உங்களுக்கு இடமில்லை.. சுந்தரை கழட்டிவிடும் கேப்டன் கோலி.. ஆனால் காரணம் அக்சர் கிடையாது!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட தயாராகிக் கொண்டு இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாகும்.

மூன்றாவது டெஸ்ட்
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடக்கும். இது பகலிரவு ஆட்டமாக இருக்கும். இதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

எப்படி
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆட போகும் வீரர்கள் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணியில் 5 பவுலர்கள் இருப்பார்கள். ஆனால் இரண்டு ஸ்பின் பவுலர்கள் மட்டுமே இருப்பாங்கள்.

மூன்று பேர்
அதன்படி பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று ஸ்பீட் பவுலர்கள் ஆடுவார்கள். பும்ரா, இஷாந்த் சர்மா, பாண்டியா ஆகியோர் ஆடுவார்கள். ஸ்பின் பவுலிங்கில் அஸ்வின், சகஸ்ர பட்டேல் ஆடுவார்கள்.

நீக்கம் ஏன்
சுந்தரை அடுத்த போட்டியில் நீக்குவதற்கு அக்சர் பட்டேல் காரணம் இல்லை. மூன்று ஸ்பின் பவுலர்களுக்கு பதிலாக ஸ்பீட் பவுலர்களை களமிறக்குவதே இதற்கு காரணம் ஆகும். அஹமதாபாத் பிட்ச்தான் சுந்தருக்கு எதிராக திரும்பி இருக்கிறது.

பிட்ச்
இதில் பாண்டிய இந்திய அணியில் ஆல் ரவுண்டராக களமிறங்குவார். பேட்டிங், பவுலிங் இவர் செய்வார். மூன்று ஸ்பின் பவுலர்களோடு இந்திய அணி களமிறங்கினால் மீண்டும் சுந்தர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications