வெறும் 30 தானா? வாசிம் அக்ரமே சொல்லியாச்சு.. பாக். ரசிகர்கள் எப்படி தாங்கப்போறாங்க!!
லண்டன்: கொஞ்சம் பயப்படாம ஆடுங்கப்பா.. என்று பாகிஸ்தான் அணிக்கு அட்வைஸ் செய்துள்ளார் முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம். இந்தியாவே வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை, மான்செஸ்டர் நகரில் நடைபெறும் கிரிக்கெட், போட்டியில் பலப்பரிட்சை நடத்த உள்ள நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் உலகம் கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான வாசிம் அக்ரம், சில அட்வைஸ்களை பாகிஸ்தான் அணிக்கு கொடுத்துள்ளார்.
வாசிம் அக்ரம், இந்தியாவின் பலத்தையும், தனது பேட்டியில் பட்டியலிட்டுள்ளார். அவர் சொல்வதை நீங்களும் கேளுங்க.

இந்தியா வெல்லும்
என்னைப் பொறுத்தளவில், 70-30 என்ற விகிதத்தில், நாளைய போட்டியில் வெல்லும் வாய்ப்புக்கு இந்தியாவுக்கே அதிகமாக உள்ளது என்பேன். இந்தியாவிடம் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. அவர்கள் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா இருவரும் முழு ஃபார்மில் உள்ளனர். எனவே ஒட்டுமொத்தமாக இந்தியா சிறப்பாக காட்சியளிக்கிறது.

பயமில்லாமல் ஆட வேண்டும்
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில், யார் எளிதாக நெருக்கடியை சமாளிக்கிறார்களோ, அவர்கள்தான் வெல்வார்கள். பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ், பதற்றமின்றி, பயமின்றி விளையாட வேண்டும். தவான் இந்திய அணியில் இல்லாதது, பாகிஸ்தானுக்கு சாதகமாகும். பாகிஸ்தானுக்கு எதிராக தவான் நல்ல ரன் குவிப்பு சாதனை வைத்துள்ளார். மேலும், இடது, வலது என பேட்ஸ்மேன்களை எதிர்கொள்ள வேண்டிய கஷ்டம் பாகிஸ்தான் பவுலர்களுக்கு இருக்காது. இந்தியா இப்படியான, லெப்ட்-ரைட், ஓப்பனிங் ஜோடியால் பெரும் பலனை அடைந்து வருகிறது.

பவுலர்கள் சரியில்லை
பாகிஸ்தான், லெக் ஸ்பின்னர் ஷதாப் கானை திரும்ப அணிக்கு கொண்டுவர வேண்டும். ஏனெனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில், பாகிஸ்தான் பவுலர்களில் அமீரை தவிர வேறு யாரும் அச்சுறுத்தவில்லை. சரியான லென்த்தில் பந்தை வீசவில்லை. பாகிஸ்தானில் 5வது பவுலருக்கு குறை உள்ளது. ஹபீஸ் அல்லது, சொயிப் மாலிக்கை வைத்துதான் அதை சமாளிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானின், 15 பேர் அணியில் இவ்வளவுதான் இருக்கிறது என்றார் வாசிம் அக்ரம்.

வெற்றி பெற முடியாத பாகிஸ்தான்
உலக கோப்பை தொடரில் இதுவரை, 6 முறை, இந்தியா-பாகிஸ்தான் மோதியுள்ளன. ஆறிலும் இந்தியாவே வென்றுள்ளது. பாகிஸ்தான் ஒருமுறையும் வெற்றி பெற முடியவில்லை. இதுபற்றி வாசிம் அக்ரமிடம் கேட்டபோது, இந்த புள்ளி விவரங்கள் மீடியாக்களில் பேசப்படுவது. வீரர்கள், அந்தந்த நாள் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். என்றார் வாசிம் அக்ரம்.


Click it and Unblock the Notifications