For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“முடிந்தால் என்னிடம் மோதுங்கள்”.. இந்திய வீரருக்காக பாக். சீனியர் ஆக்ரோஷம்.. ரசிகர்கள் வியப்பு!

மும்பை: இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசீம் அக்ரம் குரல் எழுப்பியுள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்ததால் விமர்சனங்கள் குவிந்தன.

குறிப்பாக பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சொதப்பிய இளம் வீரர் அர்ஷ்தீப் சிங், படுமோசமான விமர்சனங்களை சந்தித்தார்.

குவிந்த விமர்சனங்கள்

குவிந்த விமர்சனங்கள்

சூப்பர் 4 சுற்றில் கடைசி வரை இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்ற சூழல் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு முக்கியமான கேட்ச்-ஐ அர்ஷ்தீப் சிங் தவறவிட்டது இந்தியாவை தோல்விக்கு தள்ளியது. இதனையடுத்து அர்ஷ்தீப் சிங் ஒரு காலிஸ்தானி எனக்குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பினர்.

 வசீம் அக்ரம் ஆதரவு

வசீம் அக்ரம் ஆதரவு

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கிற்காக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசீம் அக்ரம் கொந்தளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சமூக வலைதளங்களில் யாரையேனும் டார்கெட் செய்ய வேண்டும் என்றால், என்னை குறிவையுங்கள். நீங்கள் விமர்சித்தால், உங்களை விட 10 மடங்கு அதிகமாக ஆத்திரம் கொள்வேன். என்னிடம் நன்றாக பேசினால், அவர்களுக்கு நானும் நல்லவனாக இருப்பேன். அதைவிடுத்து ஒரு இளைஞரிடம் இப்படி நடந்துக்கொள்கிறீர்கள்.

சொந்த வீரருக்கே இப்படியா?

சொந்த வீரருக்கே இப்படியா?

இந்தியர்களாக இருந்துக்கொண்டு, சொந்த நாட்டு வீரரை இப்படியா விமர்சிப்பது??.. கிரிக்கெட் என்றால் முதலில் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள், அங்கு எப்படிபட்ட அழுத்தம் இருக்கும் என்பதை உணர்ந்து பார்த்தால் தான் தெரியும். அதைவிடுத்து இளம் வீரருக்கு இப்படி ஒரு சோகத்தை கொடுக்காதீர்கள் என அக்ரம் கூறியுள்ளார்.

10 -15 ஆண்டுகள்

10 -15 ஆண்டுகள்

அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் எதிர்காலமாக மாறக்கூடியவர். அடுத்த 10 - 15 ஆண்டுகளுக்கு முன்னணி வீரராக இந்திய அணிக்கு உதவலாம். ஒரு கேட்ச்- தவறவிட்டுவிட்டார் என்பதற்காக அவரின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் நடந்துக்கொள்ளக்கூடாது என வசீம் அக்ரம் கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 15, 2022, 20:35 [IST]
Other articles published on Sep 15, 2022
English summary
Ex Pakistan player Wasim akram Comes a support for Arshdeep singh over his Misfield against Pakistan team in asia cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+