மும்பை : பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் சச்சினை கேலி செய்த ஒரு சம்பவத்தை பற்றி சமீபத்தில் பேசியுள்ளார்.
சச்சின் தன் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தார். 1989இல் இந்திய அணி பாகிஸ்தான் சென்றது. அந்த அணியில் தான் இளம் சச்சின் டெண்டுல்கர் இடம் பிடித்து இருந்தார்.

அந்த நேரத்தில் வாசிம் அக்ரம் உலக கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அச்சுறுத்தல் நிறைந்த பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்று விட்டார்.
தன் முதல் போட்டியில் சச்சின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களான இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் உள்ளிட்டோரை எதிர்த்து பேட்டிங் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார்.
வாசிம் அக்ரம் இது பற்றி கூறும் போது, "நாங்கள் இந்தியாவில் இருந்து 16 வயதில் ஒரு இளம் புயல் வருகிறது என படித்தோம். ஆனால், அவர் களத்தில் வந்து நின்ற போது 14 வயது சிறுவன் போல இருந்தார். நான் அவரிடம், "உன் அம்மாகிட்ட கேட்டுட்டு தான் இங்க வந்தியா?" என கேட்டேன்" என கூறினார்.
அந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வீசிய மோசமான பவுன்சர்களை சச்சின் எதிர்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.