Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேர்வுக்குழுவினர் தொடர்ந்து செய்யும் தவறு.. வசீம் ஜாபர் சொன்ன மாற்றம்.. ஃபாலோ செய்யுமா பிசிசிஐ

மும்பை : இந்திய வீரர்களை தேர்வு செய்யும் போது தேர்வு குழுவினர் தவறு செய்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடினால் போதும் என்ற மனநிலை இளம் வீரர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

எனினும் இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் வாய்ப்பு தருவதில்லை என்பது தனிக்கதையாக இருந்தாலும், ஒரு சிலருக்கு அது எளிதில் கிடைத்து விடுகிறது.

கைவிட வேண்டும்

கைவிட வேண்டும்

குறிப்பாக கொல்கத்தா அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், வருண்சக்ரவர்த்தி போன்ற வீரர்களுக்கு பிசிசிஐ உடனே இந்திய அணியில் தேர்வு செய்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. எனினும் அதில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வசீம் ஜாஃபர், ஐபிஎல் தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களை உடனடியாக இந்திய அணியில் தேர்வு செய்யும் முறையை தேர்வு குழுவினர் கைவிட வேண்டும்.

பொறுத்திருங்கள்

பொறுத்திருங்கள்

முதல் தரப் போட்டிகளில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை இரண்டு மூன்று சீசன்கள் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் இளம் வீரர்கள் முழுமையாக தயாராகி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தகுதியை பெறுவார்கள். இந்திய அணியில் இருக்கும் பிரச்சனையே எந்த வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் தான்.

 குழப்பத்திற்கு காரணம்

குழப்பத்திற்கு காரணம்

அதற்கு காரணம் ஒரு சீசனில் சிறப்பாக விளையாடினால் அவருக்கு உடனடியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது? என்ற குழப்பத்தில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இருக்கிறது. இதனால் நான் சொல்கிறேன் இந்திய அணிக்கு விளையாடுவது என்பது மிகவும் எளிதாகவும், விரைவாகும் கிடைக்கக் கூடியதாக இருக்க கூடாது.

 தகுதியை பெறுங்கள்

தகுதியை பெறுங்கள்

இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் அதற்கான தகுதியை முதலில் கிரிக்கெட் வீரர்கள் பெற வேண்டும் என்று வசீம் ஜாபர் கூறியுள்ளார். தற்போது வங்கதேச தொடரில் கூட சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக ரஜத் பட்டிதார், ராகுல் திருப்பாதி, ஷாபாஷ் அஹமத், குல்தீப் சென் உள்ளிட்ட இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பார்த்து தேர்வு குழுவினர் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இதனால் தான் வசீம் ஜாபர் இந்த ஐடியாவை கொடுத்திருக்கிறார்.

Story first published: Friday, December 2, 2022, 22:57 [IST]
Other articles published on Dec 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+