Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2011 ஆம் ஆண்டு இருந்தது, தற்போது இல்லை.. இந்திய அணியின் குறையை சுட்டிக்காட்டிய வசீம் ஜாபர்.. விவரம்

மும்பை : 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த வசதி தற்போது உள்ள கேப்டன்களுக்கு இல்லை என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

இது குறித்து கருத்து தெரிவித்த வசீம் ஜாபர், நியூசிலாந்து தொடரில் இந்திய அணி மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் வாஷிங்டன் சுந்தர் தான் என்று தெரிவித்துள்ளார்.

பாராட்டு

பாராட்டு

இந்த தொடரில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு , பேட்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடினார். அதுவும் காயத்திலிருந்து மீண்டு வந்த வாசிங்டன் சுந்தர், தனது ஆட்டத்தை வெளிப்படுத்த விதம் மகிழ்ச்சியை கொடுத்தது.அவருக்கு வாய்ப்பு கிடைத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளும் சிறப்பாக ஆடி ரன்குவித்தார். பவர் பிளேவிலும் பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார்.

 வித்தியாசம் தெரியும்

வித்தியாசம் தெரியும்

வாசிங்டன் சுந்தர் இளம் வீரராக இருக்கிறார். ஆனால் அனுபவம் வாய்ந்தவர் போல் செயல்படுகிறார். நிச்சயமாக வாஷிங்டன் சுந்தர் சிறந்த கிரிக்கெட் வீரராக நிறைய வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் 2010 ஆம் ஆண்டுகளில் உள்ள இந்திய அணியை பார்த்தால் உங்களுக்கு வித்தியாசம் தெரியும்.

 பந்து வீசுவார்கள்

பந்து வீசுவார்கள்

அப்போது நிறைய பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவார்கள். சச்சின் , ஷேவாக், யுவராஜ், கங்குலி என பல வீரர்கள் பந்து வீசி அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள். ஆனால் தற்போது உள்ள சூழலில் எந்த பேட்ஸ்மேன்களும் பந்து வீசுவதில்லை. ஜடேஜா, ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றால் உங்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது பந்து வீசும் வாய்ப்பு கிடைக்காது.

தயார் படுத்துங்கள்

தயார் படுத்துங்கள்

உங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஏதாவது ஒரு போட்டியில் சொதப்பினார்கள் என்றால் இந்திய அணியை காப்பாற்ற வேறு எந்த வீரரும் பந்துவீசி அணியை காப்பாற்ற வர மாட்டார். இதனால் தான் நான் சொல்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பந்து வீச தெரிந்த பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பெற வேண்டும். ஜடேஜா இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார். எனினும் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்றால் அவருக்கு மாற்றுவீராக நீங்கள் வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்த வேண்டும். அதற்காக அவரை இப்போதிலிருந்து தயார் செய்ய வேண்டும் என்று வசீம் ஜாபர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 30, 2022, 23:32 [IST]
Other articles published on Nov 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+