Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உண்மையிலேயே சூப்பர் யோசனை.. பிசிசிஐக்கு முக்கிய கோரிக்கை விடுத்த வசீம் ஜாஃபர்.. நடவடிக்கை எடுக்குமா?

மும்பை : டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

இதற்கான இறுதி கட்ட தயாரிப்பு பணிகளில் ஒவ்வொரு அணியும் ஈடுபட்டு வருகின்றன.

ஆஸ்திரேலிய ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். பேட்டிற்கு பந்து நன்றாக வரும் என்பதால் வீரர்கள் ரன் குவிக்கவும் ஏதுவாக இருக்கும்.

பாகிஸ்தானின் பிளான்

பாகிஸ்தானின் பிளான்

சுழற் பந்துவீச்சாளர்கள் சற்று சிரமப்பட்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய சூழலும் ஏற்படும். இந்த நிலையில் பாகிஸ்தான அணி t20 உலக கோப்பை வெல்வதற்காக ஒரு சூப்பர் திட்டத்தை போட்டுள்ளது. அதன்படி நியூஸிலாந்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி நியூசிலாந்து, வங்கதேசம் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் நியூசிலாந்தில் தொடங்குகிறது.

பலன் அளிக்குமா?

பலன் அளிக்குமா?

நியூசிலாந்து ஆடுகளம் கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய ஆடுகளத்திற்கு ஒப்பாக இருக்கும் என்பதால் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாரிப்பு பணி செய்ய வழிவகுக்கும்.ஆனால் இந்திய அணி அப்படி எந்த ஒரு தொடரிலும் பங்கேற்கவில்லை. மாறாக ஆஸ்திரேலிய அணியை இந்தியாவுக்கு அழைத்து மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

வசீம் ஜாபர் கருத்து

வசீம் ஜாபர் கருத்து

ஆஸ்திரேலிய ஆடுகளத்திற்கு நேர் மாறாக இந்திய ஆடுகளம் இருக்கும் என்பதால் இது டி20 உலக கோப்பைக்கு சரியான பயிற்சியாக அமையாது என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சனங்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் பஸ்ஸின் ஜாபர் பிசிஏக்கு ஒரு சூப்பர் யோசனை தெரிவித்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலிய, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளம் ஆஸ்திரேலியா ஆடுகளம் போல் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

என்ன யோசனை?

என்ன யோசனை?

ஆடுகளம் (Hard) கடினமாக இருந்தால் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் விளையாடப் போகும் மைதானம் போல் இந்திய பிட்சுகள் இருக்கும். இதில் இந்திய அணி விளையாடும் போது நல்ல பயிற்சியாக அமையும் என்று வலியுறுத்தியுள்ளார். வசீம் ஜாபர் கூறியது நூற்றுக்கு நூறு சரியான விஷயமாகும். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரித்தால் அதனால் எந்த பயனும் இருக்காது எனினும் பிசிசிஐ இதனை கேட்குமா? கேட்காதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Sunday, September 18, 2022, 13:12 [IST]
Other articles published on Sep 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+