இங்குதான் தப்பு பண்ணீட்டீங்க..இல்லனா ஸ்கோரோட நிலமயே வேற..இங்கிலாந்தின் தவறை சுட்டிக்காட்டும் ஜாஃபர்
அகமதாபாத்: 3வது டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து எந்த இடங்களில் தவறு செய்தார்கள் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் குறிப்பிட்டு காட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் பின்னர் பிட்ச் சரியில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் வசீம் ஜாஃபர் சில இடங்களை குறிப்பிட்டு குறை கூறியுள்ளார்.

இந்தியா வெற்றி
இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நடந்து முடிந்தது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 112 & 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மோசமான பிட்ச்
அகமதாபாத் ஸ்டேடியம், ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்திருந்ததாகவும் அதனால் பேட்டிங் மிக மோசமாக போனதாகவும் குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியுள்ளன. மேலும் இதுகுறித்து இங்கிலாந்து அணி ஐசிசிக்கு புகார் அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதான் தவறு
போட்டி குறித்து ட்வீட் செய்துள்ள வசீம் ஜாஃபர், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 73 ரன்களுக்கு 2 விக்கெட்களை எடுத்தது. அவர்கள் அதனை வைத்து 250 ரன்கள் அடித்திருந்தால் நல்ல போட்டியாக இருந்திருக்கும். ஆனால் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதற்கு காரணம் தவறான ஷாட்கள், டெக்னிக்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

அக்ஷர்
அக்ஷர் பட்டேல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்ததாகவும் வசீம் ஜாஃபர் தெரிவித்தார். இது குறித்து பேசிய அக்ஷர் படேல், நான் 3 வருடங்களாக அணியில் இடம்பெறவில்லை. எல்லோரும் இதை கேட்கும்போது வருத்தமாக இருக்கும் ஆனால் நான் ஒரு நாள் அணிக்கு வந்தால் அன்று என் 100% ஆட்டத்தை காட்டுவேன் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications