Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது லிஸ்ட்லையே இல்லையே.. பிசிசிஐ-க்கு வசீம் ஜாஃபர் கூறிய ஐடியா.. 2 வீரர்களின் இடத்திற்கு ஆபத்து!

மும்பை: பிசிசிஐ தேர்வுக்குழு அதிகாரிகளுக்கு முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ள ஐடியாவால் 2 வீரர்கள் சிக்கலில் சிக்கிக்கொண்டனர்.

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணியின் ப்ளேயிங் 11-யே மாறும் அளவிற்கு வீரர்கள் குவிந்துள்ளனர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்திய அணிக்கு பல புதிய கேப்டன்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

புது கேப்டன்கள்

புது கேப்டன்கள்

தென்னாப்பிரிக்க தொடரில் கே.எல்.ராகுல் விலகிய பின்னர் இளம் வீரர் ரிஷப் உடனடியாக கேப்டனாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா துணைக்கேப்டனாக தான் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ரிஷப் பண்ட்-ம் இல்லாததால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வசீம் ஜாஃபர் அட்வைஸ்

வசீம் ஜாஃபர் அட்வைஸ்

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா விவகாரத்தில் பிசிசிஐ தவறு செய்துள்ளதாக முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா குறித்து பிசிசிஐ நன்றாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் ரோகித்திற்கு பின் கேப்டனாக செயல்படக்கூடிய திறமை அவரிடம் உள்ளது.

ஸ்பெஷல் திறமை

ஸ்பெஷல் திறமை

ஐபிஎல்-ல் அவர் கேப்டன்சி செய்த விதம் அவ்வளவு அற்புதமாக இருந்தது. கேப்டன் பணியை அனுபவித்து செய்தார். மேலும் வீரர்களிடம் இருந்து சிறந்த பங்களிப்பை பெற்றார். எனவே ரோகித் இல்லையென்றால், அந்த இடத்தில் இனி ஹர்திக் இருப்பது தான் சிறப்பாக இருக்கும் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

 பிசிசிஐ-ன் நிலைபாடு

பிசிசிஐ-ன் நிலைபாடு

பிசிசிஐ-ம் இதனை ஆலோசனை செய்து தான் வருகிறது. கே.எல்.ராகுலின் தலைமையில் இந்திய அணி மோசமான தோல்விகளை பெற்றது. தற்போது ரிஷப் பண்ட்-ன் கேப்டன்சியிலும் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. எனவே இந்த தொடரிலும் இந்திய அணி தோற்றுவிட்டால், நிச்சயம் ஹர்திக் பாண்ட்யா தான் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்படுவார்.

Story first published: Friday, June 17, 2022, 15:03 [IST]
Other articles published on Jun 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+