For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி நடக்கவே நடக்காதே.. விராட் கோலியிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்.. உடனடியாக சரிசெய்ய ஜாஃபர் அட்வைஸ்

சென்னை: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அவுட்டான விதம் அச்சரியம் அளிப்பதாகவும், நம்பவே முடியவில்லை என்றும் முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தற்போது தலா ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.

முதல் போட்டியில் அபார வெற்றி கண்ட இந்திய அணி, 2வது போட்டியில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மோசமான தோல்வியை பெற்றது. குறிப்பாக 117 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்துவிட்டது.

விராட் கோலி சொதப்பல்

விராட் கோலி சொதப்பல்

டாப் ஆர்டர் வீரர்கள் ரோகித் சர்மா 13 ரன்களுக்கும், சுப்மன் கில் டக் அவுட்டும் ஆன போது விராட் கோலி தான் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார். 35 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களை அடித்தார். எனினும் அவரால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அனைவரும் ஸ்டார்க்கின் பவுலிங்கில் அவுட்டானால், இவர் நாதன் எல்லீஸின் பந்துவீச்சில் தவறான ஷாட்டை ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்.

வசீம் ஜாஃபர் அட்வைஸ்

வசீம் ஜாஃபர் அட்வைஸ்

இந்நிலையில் அது ஆச்சரியம் தருவதாக முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். அதில், நன்கு செட்டிலாகி இருந்த கோலியின் விக்கெட் அப்படி சென்றது பெரும் பின்னடைவாகும். அக்‌ஷர் பட்டேல் அல்லது ஜடேஜாவுடன் சேர்ந்து அவர் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்க வேண்டும். பொதுவாக விராட் கோலி 30 - 35 ரன்களை அடித்துவிட்டால், அதன்பின்னர் அவர் அவுட்டாவது மிகவும் அரிதான ஒன்றாகும். ஆனால் தற்போதெல்லாம் தொடர்ச்சியாக நடக்கிறது.

மாற்றிக்கொள்ள வேண்டும்

மாற்றிக்கொள்ள வேண்டும்

கோலி களத்திற்கு வந்தால் 30 - 40 ரன்களை அடிக்கிறார். பின்னர் மோசமான ஷாட்டால் அவுட்டாகிவிடுகிறார். இதனை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். கோலிக்கு பிடித்த மைதானம் விசாகப்பட்டினம். ஆனால் அங்கு துரதிஷ்டவசமாக பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. தனது தவறுகளை சரிசெய்துக்கொண்டு ஒரே மாதிரியான ஆட்டத்தை விளையாட வேண்டும் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

3வது ஒருநாள் போட்டி

3வது ஒருநாள் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னை மைதானத்தில் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கலாம். பேட்டிங்கிற்கும் சற்று உதவும் என்பதால், இந்த மைதானத்தில் கோலியின் சதத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

Story first published: Tuesday, March 21, 2023, 11:31 [IST]
Other articles published on Mar 21, 2023
English summary
Wasim jaffer gives a important advice to Virat kohli after poor dismissal in India vs Australia 2nd ODI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+