For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரோகித் சர்மாவுக்கு பிறகு இனி இவர் தான்.. தமிழக கிரிக்கெட் வீரருக்கு வசீம் ஜாபர் பாராட்டு

மும்பை :சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வீரர்களின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய அணிகளில் உள்ள சர்வதேச வீரர்களை கூட வீழ்த்தி இருக்கிறார்கள்.

இதனால் இந்தியாவின் எதிர்காலம் மிகவும் சிறப்பான முறையில் இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு மூன்று வீரர்கள் கொண்டு செல்ல போகிறார்கள் என வசீம் ஜாபர் கணித்திருக்கிறார்.

Wasim jaffer lauds 3 Young cricketers as they will take forward indian cricket

இது குறித்து பேசிய அவர் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை தயாராகி விட்டது என்று நான் கருதுகிறேன். ஏற்கனவே ஜெய்ஸ்வால் தன்னுடைய திறமையை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிரூபித்து விட்டார். அவரை டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் அவர் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தன்னுடைய வருகையை உணர்த்திவிட்டார். இதேபோன்று இரண்டாவது வீரர் கில் அவர் ஏற்கனவே ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய பெயரை நிரூபித்திருக்கிறார். நிச்சயமாக இவ் வீரர்களும் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள். இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு வீரர் இருக்கிறார். அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அது வேறு யாருமல்ல தமிழக வீரர் சாய் சுதர்சன் தான். ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் விதமாக இருக்கட்டும். பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக வளரும் வீரர்களுக்கான தொடரில் அவர் விளையாடிய விதமாகட்டும் இப்படி பலவற்றை அவரைக் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியாவில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வர அவருக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்கிறது. என்று வசீம் ஜாபர் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த டி என் பி எல் தொடரில் விளையாடிய 6 லீக் ஆட்டத்தில் அரைசதம் அடித்த சாய் சுதர்சன், ஐபிஎல் இறுதிப் போட்டியில் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். இதைப் போன்று தற்போது இளையோருக்கான ஆசிய கிரிக்கெட் போட்டியிலும் சாய் சுதர்சன் அரை சதம்,சதம் ஆகியவற்றை அடித்திருக்கிறார்.

Story first published: Saturday, July 22, 2023, 18:20 [IST]
Other articles published on Jul 22, 2023
English summary
Wasim jaffer lauds 3 Young cricketers as they will take forward indian cricket கோலி, ரோகித் சர்மாவுக்கு பிறகு இனி இவர் தான்.. தமிழக கிரிக்கெட் வீரருக்கு வசீம் ஜாபர் பாராட்டு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+