For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போன் செய்தேன்.. அதை கூட எடுக்காமல் அவமதித்தனர்.. இப்போது மத ரீதியாக தாக்குகிறார்கள்.. வாசிம் பகீர்

டேராடூன்: உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து வாசிம் ஜாபர் விலகியது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து வாசிம் ஜாபர் நேற்று விலகினார். அணியில் தனக்கு மரியாதை இல்லை என்று கூறி பயிற்சியாளர் ஜாபர் பதவி விலகி உள்ளார்.

இவர் மத ரீதியாக பாகுபாடு காட்டியதாக கூறி உத்தரகாண்ட் நிறுவனம் ஜாபர் மீது குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தது. இந்த புகார்கள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பம்

திருப்பம்

இந்த விவகாரத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி உத்தரகண்ட் அணியின் செயலாளர் வாசிம் ஜாபர் மீது கடுமையான புகார்களை வைத்துள்ளார். அதில், வாசிம் ஜாபருக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தது. அவர் மீடியாவிடம் நிறைய பொய் சொல்கிறார்.

தவறான விஷயம்

தவறான விஷயம்

நிறைய தவறான விஷயங்களை வாசிம் ஜாபர் சொல்கிறார். அவர் சொல்வதை எல்லாம் கேட்க கூடாது. அவர்தான் வீரர்களை தேர்வு செய்தார். அனைத்தையும் ஒப்புக்கொண்டோம். ஆனால் போக போக அணியில் வீரர்கள் எல்லோரும் அவரின் தேர்வின் கீழ் மட்டுமே எடுக்க வேண்டும். பயிற்சியாளர்களை கூட அவர்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டார்.

அணி நிர்வாகம்

அணி நிர்வாகம்

அதோடு அணியை மொத்தமாக கட்டுப்படுத்த பார்த்தார். அணி நிர்வாகம் ஏன் இருக்கிறது என்று கேட்கும் அளவிற்கு அவரின் செயல் இருந்தது. அவருக்கு எல்லாம் கொடுத்தும் கூட அவரால் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் உத்தரகாண்ட் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. நாங்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம் என்று உத்தரகாண்ட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பதில் அளித்தார்

பதில் அளித்தார்

இதற்கு பதில் அளித்துள்ள ஜாபர், நான் ஜெ பிஸ்தாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கூறினேன். இதற்கு முதலில் அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அதற்கு பின் அவர் கடைசியில் இஃபாலை கேப்டனாக நியமித்தனர். இது அணிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தியது.

கேட்கவில்லை

கேட்கவில்லை

அணி தேர்வில் நான் சொன்னது எதையும் கேட்கவில்லை. நான் நிறைய இ மெயில்களை அனுப்பினேன். ஆனால் எந்த மெயிலுக்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை. இப்போது இதை மத பிரச்சனை போல மாற்ற திட்டமிடுகிறார்கள். எனக்கு தெரியாமல் அணியில் நிறைய மாற்றங்களை செய்தனர்.

மொத்தம் 11 வீரர்கள்

மொத்தம் 11 வீரர்கள்

மொத்தம் 11 வீரர்கள் அணியில் எனக்கு தெரியாமல் மாற்றப்பட்டனர். இது பற்றி கேட்க வேண்டும் என்று அணி நிர்வாகத்திற்கும் போன் செய்தேன். ஆனால் அவர்கள் என்னுடைய போனை எடுக்கவில்லை. நான் பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை.

வாசிம் ஜாபர்

வாசிம் ஜாபர்

என்னை மதிக்கவில்லை. நான் யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. ஒரு மெசேஜ் கூட செய்யவில்லை . யாருமே பேசவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அதனால்தான் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினேன், என்று வாசிம் ஜாபர் குறிப்பிட்டார்.

Story first published: Thursday, February 11, 2021, 18:05 [IST]
Other articles published on Feb 11, 2021
English summary
Senior Player Wasim Jaffer opens up about Uttarkhand team allegations on team selection.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+