Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வசீம் ஜாபர் தேர்வு செய்த உலககோப்பை இந்திய அணி.. அதிரடி வீரருக்கு இடமில்லை.. இது சரியான அணியா?

மும்பை : உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை அறிவிக்க இன்று தான் கடைசி நாளாகும். இந்த நிலையில் பிசிசிஐ தேர்வு குழு அகார்கர் தலைமையில் இன்று மும்பையில் கூடுகிறது.மதியம் ஒரு மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அகார்கர் குழு அறிவிக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர்கள் பலர் உலகக்கோப்பைக்கான அணி எப்படி இருக்க வேண்டும் என்று தாங்களே 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

Wasim jaffer Picks india world cup squad without star player

இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் தேர்வு செய்துள்ள அணியை தற்போது பார்க்கலாம். வசீம் ஜாபர் தனது அணியில் ஒரு பெரிய டிவிஸ்ட் வைத்திருக்கிறார். உலகின் நம்பர் ஒன் அதிரடி வீரர் என்று அழைக்கப்படும் சூரியகுமார் யாதவுக்கு, தனது அணியில் வசீம் ஜாஃபர் இடம் கொடுக்கவில்லை. அவர் தேர்வு செய்துள்ள அணியில் ரோகித் சர்மா , கில், விராட் கோலி என டாப் வரிசையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

மேலும் நடுவரசையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமான திலக் வர்மாவுக்கு வசீம் ஜாபர் வாய்ப்பு வழங்கி இருக்கிறார். மேலும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோருக்கு வசீம் ஜாபர் தனது அணியில் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்.இதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இசான் கிஷனுக்கு ஜாபர் முன்னுரிமை வழங்கி இருக்கிறார்.

ஆல்ரவுண்டர்களாக நான்கு பேரை ஜாபர் தேர்வு செய்து இருக்கிறார். அதில் ஹர்திக் பாண்டியா,ஜடேஜா, அக்சர் பட்டேல்,சர்துல் தாக்கூர் ஆகியோருக்கு இடம் கிடைத்திருக்கிறது. மேலும் சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவுக்கு இடம் கிடைத்திருக்கிறது. பும்ரா, சமி, சிராஜ் ஆகிய மூவருக்கும் வசீம் ஜாஃபர் அணியில் இடம் கிடைத்திருக்கிறது.சஞ்சு சாம்சன், சாகல்,சூரியகுமார் யாதவ் ஆகிய மூவருக்கும் வசீம் ஜாபர் இடம் தரவில்லை.

வசீம் ஜாபர் அணி - ரோகித், கில், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், அக்சர் பட்டேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா,ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், திலக் வர்மா,

Story first published: Tuesday, September 5, 2023, 12:15 [IST]
Other articles published on Sep 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+