கடைசி நேரத்திலா இப்படி செய்வது? வசீம் ஜாஃபர் முடிவால் அதிர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
டேராடூன்: பிரபல உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே டிராபிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வசீம் ஜாஃபரின் தீடீர் முடிவு உத்தர்காண்ட் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு தொடர்கள் நடைபெற தொடங்கியுள்ளன. சமீபத்தில் டி20 தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி நடைபெற்ற நிலையில், ஒரு நாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் பிப்.20ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
விஜய் ஹசாரே தொடருக்காக அனைத்து அணிகளும் முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், உத்தர்காண்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் வசீம் ஜாஃபர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்றுக்கொள்ளாத கிரிக்கெட் வாரியம்
வசீம் ஜாஃபர், ராஜினாமா கடிதம் அனுப்பியது உண்மை தான் என அறிவித்துள்ள அம்மாநில கிரிக்கெட் வாரியம், இன்னும் அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் உள்ளது. விஜய் ஹசாரே கோப்பை நெருங்கிவிட்டதால், ராஜினாமாவை ஏற்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

உள்நாட்டு போட்டியில் கில்லி
42 வயதாகும் வசீம் ஜாஃபர், உள்நாட்டு போட்டிகளில் அதிரடி காட்டி வந்தவராவார். இதுவரை 260 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 57 சதம் மற்றும் 91 அரை சதங்களை விளாசினார். இவர் மிகவும் குறைவான சர்வதேச போட்டிகளிலேயே விளையாடியுள்ளார்.

பிசி மேனாக வலம் வருபவர்
வசீம் ஜாஃபர் உத்தர்காண்ட் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தாலும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளாராக தொடர்ந்து வருகிறார். அதே போல வங்கதேச கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளாரகவும் உள்ளார்.

போட்டி விவரம் என்ன?
விஜய் ஹசாரே தொடர் வரும் பிப்.20ம் தேதி தொடங்கி மார்ச் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக பிப்.13, 15 மற்றும் 17ம் தேதிகளில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications