தொடக்க வீரர்கள்
இன்றைய போட்டி தொடர்பாக வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அயர்லாந்துக்கு எதிராக தாம் விரும்பும் அணி என்று பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார். இதில் தொடக்க வீரராக இஷன் கிஷனையும், ருத்துராஜ் கெய்க்வாட்டையும் வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார். ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இந்த தொடர் தான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.
நடுவரிசை வீரர்கள்
நடுவரிசையில் மூன்றாவது வீரராக சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ள வாசிம் ஜாபர், ஹர்திக் பாண்டியாவை 4வது வீரராக களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். 5வது வீரராக வாசிம் ஜாபர் தீபக் ஹூடாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். சஞ்சு சாம்சன் அணியில் இருந்தும் ஹூடாவின் பெயரையே வாசிம் ஜாபர் முன்மொழிந்துள்ளார்.
பந்துவீச்சு பிரிவு
அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக்கை 6வது வீரராக தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாபர். ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேனான அக்சர் பட்டேல் 7வது வீரராகவும், ஹர்சல் பட்டேலை 8வது வீரராகவும் வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார். 9வது வீரராக சாஹ்ல், 10வது வீரராக ஆவேஷ் கான் மற்றும் 11வது வீரராக ஆர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு தருவேன் என்று கூறியுள்ள வாசிம் ஜாபர் , புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வாசிம் ஜாபர் லெவன்
1.இஷான் கிஷன். 2, ருத்துராஜ் கெய்க்வாட், 3. சூர்யகுமார், 4.தீபக் ஹூடா, , 5,ஹர்திக் பாண்டியா, 6.தினேஷ் கார்த்திக், 7.அக்சர் பட்டேல், 8. ஹர்சல் பட்டேல், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, ஆவேஷ் கான் / உம்ரான் மாலிக், 11.சாஹல்
நேரம்- இரவு 9 மணி
சேனல்- சோனி டென் 1, சோனி சிக்ஸ்