Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தை இறங்கி அடிக்க இந்த அணி போதுமா? - வாசிம் ஜாபர் பிளேயிங் லெவன்

மும்பை: சென்னையில் வரும் 5ம் தேதி துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான மாதிரி இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார்.

சமூக தளங்களை சரியாக கையாளத் தெரிந்த மற்றொரு ரிட்டையர்டு இந்திய கிரிக்கெட்டர் என்றால் அது வாசிம் ஜாபர் எனலாம். வீரேந்திர ஷேவாக் போல் பக்கா கமர்ஷியல் டைப்ஸ் ட்வீட்ஸ் இல்லையென்றாலும், சுருக், நறுக் பாயிண்ட்களால் சில பல ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங்கில் வைத்திருப்பார்.

தற்போது, மற்றொரு விவாதத்திற்கு தனது ட்வீட் மூலம் வித்திட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் வரும் 5ம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான, தனது மாதிரி பிளேயிங் லெவனை வாசிம் வெளியிட்டுள்ளார்.

 மாதிரி பிளேயிங் லெவன்

மாதிரி பிளேயிங் லெவன்

அவர் தனது அணியில் ரோஹித், கில், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், அக்ஷர், அஷ்வின், குல்தீப் (அ) தாகூர், இஷாந்த் (அ) சிராஜ், பும்ரா ஆகியோருக்கு இடம் அளித்துள்ளார். ஓப்பனர்களாக ரோஹித், கில் பார்ட்னர்ஷிப்பை அவர் தேர்வு செய்தது பெர்ஃபெக்ட் சாய்ஸ் எனலாம்.

 நோ மாயங் அகர்வால்

நோ மாயங் அகர்வால்

புஜாரா, கேப்டன் கோலி, ரஹானே, பண்ட் ஆகியோர் மிடில் மற்றும் லோ மிடில் தேர்வுகளாக உள்ளனர். ஆனால், காயத்திற்கு பிறகு இத்தொடரில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஜாபர் வாய்ப்பளிக்கவில்லை. அதேபோல், 'ஸ்லோ அண்ட் ஸ்டெடி' மாயங்க் அகர்வாலுக்கும் அவர் வாய்ப்பு தரவில்லை.

 லெஃப்ட் ஆர்ம் ஸ்பின் அட்டாக்

லெஃப்ட் ஆர்ம் ஸ்பின் அட்டாக்

இங்கிலாந்து வீரர்கள் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னில் திணறுவார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லும் ஜாபர், அதற்காகவே அக்ஷர் படேலை தேர்வு செய்திருப்பதாக கூறியுள்ளார். காம்பினேஷன் மற்றும் சூழலைப் பொறுத்து 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்தால், குல்தீப்பை உள்ளே கொண்டு வரலாம். இல்லையெனில், அவருக்கு பதில் ஷர்துல் தாகூரை சேர்க்கலாம்.

 சிராஜுக்கு வாய்ப்பளிக்கலாம்

சிராஜுக்கு வாய்ப்பளிக்கலாம்

அதேபோல், இஷாந்த் சேர்க்கப்படவில்லை எனில் சிராஜ்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், விராட் கோலி (c), அஜின்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், மாயங் அகர்வால், புஜாரா, ரிதிமான் சாஹா, ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 ஆடியன்ஸ் பிளேயிங் லெவன்

ஆடியன்ஸ் பிளேயிங் லெவன்

கிரிக்கெட் எக்ஸ்பெர்ட்ஸ் தான் 11 வீரர்களை தேர்வு செய்யணுமா? நாமும் தேர்வு செய்யலாமே.. வாங்க களம் இறங்குங்க.. காசா? பணமா? நீங்களும் உங்கள் பெஸ்ட் பிளேயிங் லெவனை கமெண்ட்ஸில் தெரிவியுங்கள். உங்க தேர்வு எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

Story first published: Wednesday, February 3, 2021, 9:12 [IST]
Other articles published on Feb 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+