Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஹர்திக் பாண்ட்யாவுக்கு இப்படி ஒரு பெருமையா?”.. இன்னும் 5- 7 ஆண்டுகள் தான்.. வசீம் ஜாஃபர் புகழாரம்!

மும்பை: ஹர்திக் பாண்ட்யாவின் தற்போதைய ஃபார்ம் குறித்து வசீம் ஜாஃபர் கூறியுள்ள கருத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இங்கிலாந்து அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுடன் மோதவுள்ளது.

இந்த தொடரில் ரசிகர்களிடமும் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஹர்திக் பாண்ட்யா தான்.

பாண்ட்யா கம்பேக்

பாண்ட்யா கம்பேக்

காயத்தால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக வாய்ப்பின்றி இருந்த பாண்ட்யா ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் நீக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 77 ரன்கள் மற்றும் 4 விக்கெட்கள் இந்திய அணியின் பலத்தை கூட்டியுள்ளது.

ஜாஃபர் நம்பிக்கை

ஜாஃபர் நம்பிக்கை

இந்நிலையில் கபில் தேவ்வாக ஹர்திக் பாண்ட்யா உருவெடுப்பார் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கபில் தேவ்-ன் சாதனையை முறியடிக்க கூடிய அனைத்து தகுதிகளும் பாண்ட்யாவிடம் வந்துவிட்டது. கபில் தேவ் என்பது பெரிய இடம். அவரின் இடத்திற்கு செல்வது குறித்து இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வர முடியாது. எனினும் பாண்ட்யாவால் முடியும் என நினைக்கிறேன்

அடுத்த 7 ஆண்டுகள்

அடுத்த 7 ஆண்டுகள்

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஹர்திக் பாண்ட்யா இதே போன்று விளையாடி வந்தால் நிச்சயம் கபில் தேவ்-க்கு அருகில் சென்றுவிடுவார். எனவே இந்த ஃபார்மை இழந்துவிடாமல் ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என வசீம் ஜாஃபர் கூறினார்.

 கபில் சாதனைகள்

கபில் சாதனைகள்

சர்வதேச அளவில் 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கபில் தேவ் 3,783 ரன்களை அடித்துள்ளார். இதில் ஒரு சதமும், 14 அரைசதமும் அடங்கும். பந்துவீச்சை பொறுத்தவரையில் 221 இன்னிங்ஸ்களில் 253 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவோ, தற்போது வரை 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,386 ரன்களை அடித்துள்ளார். இதில் 8 அரைசதங்கள் அடங்கும். இதே போல 63 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

Story first published: Tuesday, July 19, 2022, 19:26 [IST]
Other articles published on Jul 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+