Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்டின் இடம் என்ன? வசீம் ஜாபர் சொன்ன அறிவுரை.. காரணம் என்ன ?

மும்பை : இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக நடைபெறுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .

முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்டு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கும் இந்த அணியில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார், சூரியகுமார் யாதவ் தான் அதிக வயது உடையவர்கள். மற்ற அனைவருக்குமே சராசரி வயது 25 தான் இருக்கும்.

துணை கேப்டன்

துணை கேப்டன்

இதனால் இது டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பொறுத்தவரை புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இதனால் ரிஷப் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

தற்போது சீனியர்கள் இல்லாத நிலையில் ரிஷப் பண்ட் டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ரிஷப் பண்ட், கண்டிப்பாக பிளேயிங் லெவனில் இருப்பார்.

நடுவரிசை

நடுவரிசை

ஆனால் அவருடைய இடம் எது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர், ரிஷப் பண்டை நீங்கள் ஆட்டத்தின் இறுதியில் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அவர் அந்த இடத்தில் இதற்கு விளையாடியது இல்லை. ஐபிஎல் போட்டிகளில் கூட ரிஷப் பண்ட், நடுவரசையில் தான் களம் இறங்கி இருக்கிறார்.பேட்டிங்கில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் அவர் பெரும்பாலும் விளையாடி இருக்கிறார்.

தொடக்க வீரர்

தொடக்க வீரர்

தற்போது இந்த இடம் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியாவால் நிரப்பப்பட்டுள்ளது.இதனால் நடுவரிசையில் ரிஷப் பண்ட்பக்கு இடம் இருக்காது. ஃபில்டர்கள் 30 மீட்டர் வட்டத்தில் இருக்கும்போது, ரிஷப் பண்ட் மிகவும் அபாயகரமான வீரராக இருப்பார். பவுண்டரி லைனில் ஆளில்லாத நேரத்தில் அவரால் தூக்கி அடித்து ரன்களை சேர்க்க முடியும்.

இதனால் ரிஷப் பண்டிற்கு டாப் வரிசையில் இடம் வழங்க வேண்டும். தொடக்க வீரராக அவருக்கு வாய்ப்பு கொடுப்பது மிகவும் சிறந்தது.

அபாயகரமான வீரர்

அபாயகரமான வீரர்

ரிஷப் பண்டை பொறுத்தவரை இதுதான் அவருக்கு சரியான இடம். ரிஷப் பண்ட் பவர் பிளேவில் விளையாடும் போது ஒரு 20, 30 ரன்கள் தாண்டி விட்டால் அவர் அபாயகரமான வீரராக மாறிவிடுவார். அப்போது ஃபில்டர்கள் பவுண்டரி லைனில் நின்றாலும் அது அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்யும் வரும்போது ஃபில்டர்கள் பவுண்டரி லைனில் நிற்பார்கள்.

யாருக்கு வாய்ப்பு ?

யாருக்கு வாய்ப்பு ?

இதனால் அவருக்கு நெருக்கடிதான் அதிகமாகிறது. அந்த நேரத்தில் அவர் எடுத்த உடனே சிக்ஸர் அடிப்பது மிகவும் கடினம். ரிஷப் பண்ட் எப்போதுமே உங்களுக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுப்பார். என்னை பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சுப்மான் கில், ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்சல் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது சாகல் ,முகமது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வசீம் ஜாபர் கூறியுள்ளார்.

Story first published: Friday, November 18, 2022, 12:56 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+