Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிவுக்கு வருகிறதா ஜடேஜாவின் வாய்ப்புகள்.. இந்தியாவின் திட்டத்துக்குள் வந்த அக்‌ஷர்.. வசீம் சூசகம்!

மும்பை: இந்திய அணியில் இனி ரவீந்திர ஜடேஜாவின் தேவையே இருக்காது என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ளதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஆனால் பிசிசிஐ-ன் திட்டம் நிறைவேறியதாக தெரிகிறது.

இந்திய அணி தற்போது இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்றும் துரதிஷ்டவசமாக தோற்றது.

அக்‌ஷரின் செயல்பாடுகள்

அக்‌ஷரின் செயல்பாடுகள்

இந்த போட்டியில் இந்தியாவின் தோல்வியை விட, அக்‌ஷர் பட்டேலின் போராட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீப காலமாக அவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இரண்டிலுமே இந்திய அணியை காப்பாற்றி வருகிறார். முதல் போட்டியில் இந்தியா விக்கெட்களை இழந்து சரிந்த போது 20 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இதே போல 2வது போட்டியில் 31 பந்துகளில் 65 ரன்கள் அடித்து கடும் போராட்டம் மேற்கொண்டார்.

ஜாஃபரின் பேச்சு

ஜாஃபரின் பேச்சு

இந்நிலையில் அக்‌ஷர் பட்டேலின் செயல்படுகளால் இனி ஜடேஜா தேவைப்பட மாட்டார் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 3 வடிவ போட்டியிலும் அட்டகாச வீரராக உள்ள ஜடேஜாவை தற்போது இந்தியா மிஸ் செய்யவில்லை. அக்‌ஷர் பட்டேலின் ஆட்டத்தை கண்டவுடன் ஜடேஜா குறித்த பேச்சுகளே இல்லை. ஜடேஜாவை போன்றே ஒரு ஆல்ரவுண்டர் கிடைத்தது அதிர்ஷ்டமாகும்.

அக்‌ஷரின் செயல்பாடு

அக்‌ஷரின் செயல்பாடு

பவர் ப்ளேவில் பவுலிங் செய்யக்கூடிய ஸ்பின்னராக ஜடேஜா இருந்தார். ஆனால் தற்போது அக்‌ஷரும் செய்கிறார். இதே போல இக்கட்டான சூழலில் பேட்டிங்கும் செய்கிறார். எதாவது அடிக்க வேண்டும் என பேட்டை சுற்றாமல், சரியான பந்துகளை தேர்வு செய்து, அதனை சரியாக சிக்ஸருக்கு அனுப்புகிறார். குறிப்பாக ஸ்பின்னர்களை குறிவைத்து ஸ்ட்ரைட்டிலேயே அடிப்பது சிறப்பாக உள்ளது என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

ஜடேஜா உடல்நிலை

ஜடேஜா உடல்நிலை

ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக காலில் காயம் ஏற்பட்டு வெளியேறிய ஜடேஜா, பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார். இலங்கை தொடரிலேயே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் உடற்தகுதியை பெறவில்லை. எனவே அவர் நியூசிலாந்துடனான தொடருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, January 6, 2023, 18:51 [IST]
Other articles published on Jan 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+