Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஜெயிக்கனும்னா அவர் வந்தே தீரணும்”.. 3வது டி20 போட்டி.. பாண்ட்யாவுக்கு வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!

ராஜ்கோட்: இலங்கை அணியுடனான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒரு மாற்றத்தை செய்தே தீர வேண்டும் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கோரியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற சூழலில் 2வது போட்டியில் இலங்கை ஆதிக்கம் செலுத்தியது.

எனவே வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கப்போகும் கடைசி டி20 போட்டி ஜனவரி 8ம் தேதியன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

3வது டி20

3வது டி20

இந்திய அணியை பொறுத்தவரையில் முதல் 2 போட்டிகளிலுமே ஹர்திக் பாண்ட்யா தேர்வு முறைகளிலும், ஆட்ட முடிவுகளிலும் பெரிய ரிஸ்க்-காக இருந்தது அனைவரும் அறிந்ததே. முதல் போட்டியில் அக்‌ஷரை கடைசி ஓவரில் கொண்டு வந்தார், 2வது போட்டியில் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் தற்போது வெற்றி பெறுவதற்கான கட்டாயத்தில் சரியான தேர்வுகளை செய்தாக வேண்டும்.

 வசீம் ஜாஃபர் கருத்து

வசீம் ஜாஃபர் கருத்து

இந்நிலையில் இதற்காக இந்திய ப்ளேயிங் 11ல் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டும் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 3வது போட்டியில் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும். ஏனெனில் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்களை நிறைய குவித்துள்ளார். குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் மிக சிறப்பாக விளையாடியிருந்தார்.

சுப்மன் கில் வேண்டாம்

சுப்மன் கில் வேண்டாம்

தற்போது ஓப்பனிங் செய்து வரும் சுப்மன் கில், 2 போட்டிகளிலுமே 5 மற்றும் 7 ரன்களை மட்டுமே அடித்து பெரும் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாக சிறப்பாக செயல்படும் அவரால் டி20 கிரிக்கெட்டில் அதிரடி தொடக்கத்தை பெற முடியவில்லை. ஆனால் அதிரடியாக ஆடும் ருதுராஜ் கெயிக்வாட் பெஞ்சில் உள்ளார். எனவே அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என ஜாஃபர் கூறியிருக்கிறார்.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

2019ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு அறிமுகமான சுப்மன் கில், தொடக்கத்தில் இருந்தே சீராக, நிதானமாக ரன் குவிக்கும் திறமை உள்ளது என பாராட்டப்பட்டார். அவர் டி20 போன்ற அதிரடிக்கு இன்னும் சரவரிவில்லை என்பதால் தான் 2022ம் ஆண்டு வரை டி20ல் வாய்ப்பே பெறாமல் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 7, 2023, 15:24 [IST]
Other articles published on Jan 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+