For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த விராட் கோலி அவர்தான்.. யாரும் கண்டுக்கொள்ளாத இளம் வீரர்.. வசீம் ஜாஃபர் புகழாரம்!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு பிறகு ஜொலிக்கப்போகும் வீரர் யார் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் அடித்துக்கூறியுள்ளார்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 404 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 258 ரன்களும் எடுத்து டிக்ளெர் செய்தது. இதனால் 513 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்த போட்டியில் சரிவில் இருந்த இந்திய அணியை சட்டீஸ்வர் புஜாரா 90 மற்றும் 102 ரன்களை அடித்து காப்பாற்றினார். ஆனால் புஜாராவை போலவே சுப்மன் கில்லும் 2வது இன்னிங்ஸில் சதமடித்து கடினமான இலக்கை நிர்ணயிக்க உதவியிருந்தார். 130 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 110 ரன்களை குவித்தார்.

அடுத்த விராட் கோலி

அடுத்த விராட் கோலி

இந்நிலையில் இவர் தான் இந்தியாவின் அடுத்த விராட் கோலி என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். சுப்மன் கில் தனக்கு கிடைத்த சில வாய்ப்புகளை தவறவிட்டார். ஆனால் தற்போது கம்பேக் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு கிளாசி ப்ளேயர் ஆகும். எனவே விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியில் ஜொலிக்கப்போவது சுப்மன் கில் தான். அவர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் அசால்ட்டாக விளையாடக்கூடிய விரர்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

வங்கதேசத்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கம்பேக் கொடுப்பார் என தெரிகிறது. ஒருவேளை ரோகித் ஓப்பனிங்கிற்கு வந்தாலும், சதமடித்த சுப்மன் கில்லை ஒதுக்க முடியாது. எனவே இருவரையும் ஒரே அணியில் கொண்டு வர வேண்டும் என்றால் ஒரு ஸ்பின்னரை குறைத்து விடுவார்கள். எனவே முதல் டெஸ்டில் விளையாடும் 3 ஸ்பின்னர்களில் ஒருவரை நீக்கிவிடுவார்கள் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

புஜாராவும் கம்பேக்

புஜாராவும் கம்பேக்

இந்திய அணியில் சட்டீஸ்வர் புஜாராவும் சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, ஸ்ரேயாஸ், பண்ட், ஹர்திக் பாண்ட்யா என பலரும் தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என வந்து நின்றுள்ளதால் ப்ளேயிங் 11ல் பெரிய குழப்பங்கள் ஏற்படும் என தெரிகிறது.

Story first published: Saturday, December 17, 2022, 11:58 [IST]
Other articles published on Dec 17, 2022
English summary
Ex Indian Cricketer wasim jaffer Thinks Subhman gill is the next virat kohli for Team India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+