Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனி பாண்ட்யா அவ்வளவு தான்”.. உலகக்கோப்பையில் தமிழக வீரருக்கு இடம்.. அடித்துக்கூறும் வசீம் ஜாஃபர்!

கொல்கத்தா: இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் இனி அவ்வளவு தான் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் அடித்துக்கூறியுள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த தொடரில் இந்திய அணி 3 - 0 என முற்றிலுமாக கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக இளம் வீரர்கள் பெரும் வரவேற்பை பெற்றனர்.

கவனம் பெற்ற வீரர்

கவனம் பெற்ற வீரர்

குறிப்பாக இதில் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர், இந்திய அணியின் ஆல்ரவுண்டராக தன்னை மாற்றிக்கொண்டார். 3 டி20 போட்டிகளில் மொத்தமாக 92 ரன்களை குவித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 184 ஆகும். அதாவது ஒவ்வொரு 3.6 பந்துகளுக்கும் ஒரு பவுண்டரியை அடித்துள்ளார். இதில் கடைசி போட்டியில் மட்டும் 19 பந்துகளில் 35 ரன்களை அடித்தார்.

பவுலிங் திறன்

பவுலிங் திறன்

பவுலிங்கை பொறுத்தவரையில் வெங்கடேஷ் ஐயருக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அவர் வீசிய 3.1 ஓவர்களில் மிக முக்கியமான ஒரு விக்கெட்டை கைப்பற்றி அணிக்கு உதவினார். இதனால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் வகையில் இலங்கை தொடரிலும் பிசிசிஐ சேர்த்துள்ளது.

வசீம் ஜாஃபரின் கருத்து

வசீம் ஜாஃபரின் கருத்து

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர் குறித்து வசீம் ஜாஃபர் முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளார். இந்த சமயத்தில் ஹர்திக் பாண்ட்யாவை விட வெங்கடேஷ் ஐயர் தான் ஒரு படி மேல் இருக்கிறார். ஏனென்றால் பாண்ட்யா மீண்டும் எப்படி பவுலிங் வீசுவார், உடற்தகுதி என்னவென்பது தெரியாது, ஐபிஎல் தொடர் தான் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற பாண்ட்யாவுக்கு உதவும். ஆனால் தற்போதைய சூழலை பொறுத்தவரை வெங்கடேஷ் ஐயருக்கு தான் அதிக வாய்ப்பு.

ஆச்சரியமான செயல்

ஆச்சரியமான செயல்

நம்பர் 6வது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடியதை கண்டு ஆச்சரியப்பட்டேன். அவரை ஓப்பனிங் வீரராக பார்த்திருப்போம். ஆனால் தன்னை ஒரு ஃபினிஷராக மாற்றிக்கொண்டுள்ளது மிகச்சிறப்பான விஷயம். இதுமட்டுமல்லாமல் பவுலிங்கிலும் முக்கிய விக்கெட்களை எடுத்தார். இதனால் உலகக்கோப்பையில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறார் என தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, February 21, 2022, 19:08 [IST]
Other articles published on Feb 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+